முல்லை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கேப்பாபுலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்..
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கேப்பாபுலவு பூர்வீக நிலத்திற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அபிவிருத்திக்குழுக் கூட்டம் இடம்பெற்று வரும் நிலையிலே இந்த கவனயீரப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் கேப்பாபுலவு இராணுவ முகாமிற்கு முன்பாக தொடர் போராட்டத்தில், ஈடுபட்டுள்ள மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தே இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக எமது பிராந்திய செய்தியளார் தெரிவித்துள்ளார்
No comments
Post a Comment