Latest News

July 11, 2017

போர் முனைப்பில் சீனா! பலே திட்டத்துடன் தாக்க தயாராகும் இந்தியா
by admin - 0



சிக்கிம் எல்லைப் பகுதியில் நெருக்கடி கொடுத்து வரும் சீனாவிற்கு ஒரு போதும் அடிப்பணியப் போவதில்லை என இந்திய இராணுவம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதியில் தமது நிலைகளை வலுப்படுத்தும் வகையில் இந்திய இராணுவம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



இந்தியா, பூட்டான், மற்றும் சீனா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் டோக்லாம் என்ற இடம் அமைந்துள்ளது. அந்த பகுதியை நோக்கி சீனா நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

எனினும், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய இராணுவம் அதனை தடுத்து நிறுத்தியது. இதன் காரணமாக இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து, டோக்லாம் பகுதியில் இரு நாடுகளும் தமது இராணுவ வீரர்களை குவித்துள்ள நிலையில், போர் பதற்றமும் வலுபெற்றுள்ளது.

அத்துடன், இரு நாடுகளும் தங்களது படை வலிமை குறித்தும் கருத்துகளை வெளியிட்டு வந்திருந்தன. இந்நிலையில், அண்மையில் இடம்பெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மற்றும் சீனா ஜனாதிபதி ஆகியோர் சந்தித்து பேசியிருந்தனர்.

இந்த சந்திப்பை அடுத்து டோக்லாம் பகுதியில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலை முடிவுக்குக் கொண்டு வரப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டிருந்தது.

எனினும், இந்தியா சட்டவிரோதமான முறையில் டோக்லாம் பகுதியில் இராணுவத்தை நிறுத்தியிருப்பதாக சீனா குற்றம் சுமத்தியதுடன், இந்தியா தனது இராணுவத்தை மீள பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தது.

எவ்வாறாயினும், சீனாவின் கருத்தை நிராகரிக்கும் வகையில் இந்தியா இராணுவம் டோக்லாம் பகுதியில் முகாமிட்டு கூடாரங்களை அமைத்து தங்கியுள்ளனர்.

இந்திய படையினருக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் சீராக விநியோகிக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், டோக்லாம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் இருந்து சீனா இராணுவத்தின் ஒவ்வொரு அசைவையும் மிகவும் நுணுக்கமாக கண்காணிக்கும் வசதியையும் இந்திய வீரர்கள் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதன் மூலம் சீனாவின் எந்த நெருக்குதலுக்கும் அடிப்பணிய போவதில்லை என்பதை இந்தியா சூசகமான முறையில் காட்டியிருப்பதாகவும், இந்தியா பலே திட்டத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments