Latest News

July 26, 2017

யாழில் இருக்கும் இரண்டு தமிழ் தலைமைகளை அகற்றும் தீவிர முயற்சி
by admin - 0

யாழில் இருக்கும் இரண்டு தமிழ் தலைமைகளை அகற்றும் தீவிர முயற்சியில் அரசு , காவல்துறை ,ராணுவ புலனாய்வுத்துறை தீவிரம் .


முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தொடர்பான விடயங்கள் அனைவரும் அறிந்ததே ....அவரை அகற்ற மேட்கொள்ளப்படட விடயங்கள் .......

மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளம்செழியன் மீதான தாக்குதலும் அதன் பின்னணியும் பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது .

மது போதையில் இருந்தேன் மச்சான் துவக்கை பறி என்கிறார் அதுதான் செய்தேன்" என்று குற்றம் சாட்டப்பட்ட ஜெயந்தன் சொல்லியிருக்கிறார் .

நீதிபதி இளம்செழியனை இலக்கு வைத்து இந்த தாக்குதல் இடம் பெறவில்லை என காவல் துறை குறிப்பிடுகிறது .

நேரில் நின்ற சாட்சிகள் நீதிபதி இளம் செழியன் அவர்களும், அவரது மற்றைய பாதுகாவலரும் ..அவர்களின் கூற்றையே நாம் அதிகம் நம்புகிறோம் .

இலங்கை அரசு ராணுவ புலனாய்வுத்துறை வடக்கில் பாரிய குற்றச்செயல்களை தமிழரை கொண்டே செய்ய முனைகிறது அதிலும் முன்னாள் போராளிகளை கொண்டே இதை அரங்கேற்ற செய்கிறது இதில் பல தூர நோக்கு அரசியல் உள்ளது 

புனர்வாழ்வு பெற்றாலும் முன்னாள் போராளிகள் ஆபத்தானவர்கள் ஒரு நீதிபதிக்கே யாழில் பாதுகாப்பில்லை என்னும் போது யாழில் இருந்து ராணுவத்தையும் அதன் முகாம்களையும் எப்படி அகற்றலாம் .

விடுவிக்கபட்ட  முன்னாள் போராளிகளால் பிரச்சனை என்றால் ..ஏனைய காணாமல் ஆக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் உயிருடன் இருந்தாலும் அவர்களை எப்படி விடுவிப்பது ??? இவ்வாறான பல பிரச்சனைகளுக்கு  நல்லூர் தாக்குதல் வழி கோரியுள்ளது  ,

யாழில் இடம்பெற்ற காவல் துறையின் துப்பாக்கி சூட்டு சம்பவங்களுக்கு  காவல் துறை சொல்லும் காரணம் வேடிக்கையாக உள்ளது .

பல்கலைக்கழக மாணவர்கள் சுடப்பட்ட போது வானை நோக்கி சுட்ட்தாகவும் ரவுண்ஸ் திரும்பி வந்து மாணவனை தாக்கியதாகவும் சொல்லப்பட்ட்து 

இரண்டாவது மாணவன் தலை அடித்தே கொல்லப்பட்ட்தாக பிரேத பரிசோதனை அறிக்கை சொல்கிறது.

மணல் ஏற்றி சென்றவர் மீது சுட்டது அவர் நிறுத்த சொல்லியும் நிற்காதது தான் காரணம் என்றது நிற்காமல் சென்றவரை சுட்டால் சூடு ஒன்றில் முதுகில் பட்டிருக்கும் அல்லது பிடரியில் பட்டிருக்கும் ...ஆனால் அவர் சூடு பட்டு இறந்தது நெஞ்சில் என்று சொல்லப்படுகிறது .

இப்போ  நல்லூரில் சூட்டை மேற்கொண்டவர் மது போதையில் இருந்தார் என்று சொல்லப்படுகிறது . ஒருவர் மதுபோதையில் இருந்தால் 48 மணி நேரத்துக்குள் அவர் உண்மையில் மது போதையில்  இருந்தாரா  என கண்டறியலாம் . ஆனால் குற்றம் புரிந்த ஜெயந்தன் என்பவர் 48 மணிநேரம் கழித்ததே மூன்று நாளின் பின் சரணடைந்துள்ளார் ....இவர் சொல்வது சொல்லி கொடுக்க பட விடயங்கள் . கதை ,திரைக்கதை ,வேறு யாருக்கோ சொந்தம்....அது யார் ???
« PREV
NEXT »

No comments