சிங்கள அரசின் நடகம் அம்பலம்
நீதிபதி இளம்செழியன் மீது தாக்குதல் நடத்தியவர் ஒரு முன்னாள் போராளி என்பது ஒரு கட்டுக்கதை அவர் முன்னாள் போராளி இல்லை என்பதை அவர் மனைவி தெரிவித்துள்ளார் .
புலிகள் அமைப்பில் இருந்தவர் என்பது வதந்தி.
எனது கணவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தது கிடையாது. அவர் ஒரு முன்னாள் போராளி என கூறுவது வதந்தி. எனது கணவர் இதனை (துப்பாக்கி சூட்டை) தெரியாமல் செய்துவிட்டார் என சந்தேக நபரின் மனைவி தெரிவித்தார்.
கணவரை தேடி கடந்த சனிக்கிழமை முதல் பொலிசார் எமது வீட்டுக்கு பல தடவைகள் வந்து தேடுதல் நடத்தி எம்மை தீவிரமாக விசாரித்தார்கள். தற்போது எனது கணவர் பொலிசில் சரணடைந்து விட்டார் என மேலும் தெரிவித்தார்.
8ஆம் திகதி வரையில் விளக்கமறியல்.
குறித்த சந்தேக நபர் யாழ். பொலிசாரினால் யாழ். நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று மாலை முற்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு இட்டு உள்ளார்.
No comments
Post a Comment