நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஶ்ரீலங்கா காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர மற்றும் யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் இருவருக்கும் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இரு காவற்துறைஅத்தியட்சகர்களையும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் விரைவில் விசாரணைகளுக்காக அழைக்கப்படலாம் என காவற்துறை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நீதிபதி அவர்கள் தன்னை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிவரும் நிலையில் ஶ்ரீலங்கா காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர மற்றும் யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் இருவரும் நீதிபதி இலக்கு இல்லை என உடனடியாக ஊடகங்களுக்கு தகவல் வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .அத்துடன் நீதிபதி இளஞ்செழியன் விசாரித்து வரும் முக்கிய வழக்கில் காவற்துறையினர் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் என பலர் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படும் நிலையில் நீதிபதிக்கு எதிராக காவற்துறையினரால் வெளியிடப்பட்ட அறிக்கை பெரும் சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments
Post a Comment