Latest News

July 25, 2017

BIGG BOSS ஓவியா வெற்றிபெறுவது உறுதி.
BIGG BOSS மனித நிஜ உணர்வுகளின் பிம்பம்.

by admin - 0

BIGG BOSS ஓவியா வெற்றிபெறுவது உறுதி.
BIGG BOSS மனித நிஜ உணர்வுகளின் பிம்பம்.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

▪பல போலி முகங்களின் உண்மையான முகங்களை தெளிவாகக் காட்டுகிறது..!




▪நம்பமுடியாத சில மனிதர்களின் உண்மையான உணர்வுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது...



▪நாம் மற்றவர்களின் கதை கேட்டு  அவமதித்து, கண்டுகொள்ளாமல் துரத்தி/தூர வீசியவர்களின் நியாய தர்மங்களையும் காட்டுகிறது.



▪நாம், நம்பித் தொலைக்கின்ற/தொடருகின்ற திரை நட்சத்திரங்களின் போலிப் பிம்பங்களையும் தோலுரித்து தொங்க விடுகிறது!



▪திரைப் பிரபலங்கள் அனைவரும், உண்மையில் நடிகர்களே என்பதை தெளிவாக உணர வைத்திருக்கிறது.



▪திரைப் பிரபலங்கள் அனைவரும்  நம்மைப் போன்றவர்களே (கமல், ரஜினி, விஜய் மற்றும் அஜித் உட்பட) என்பதை மிக மிகத் தெளிவாக உணர வைத்திருக்கிறது.



▪பணம், பெயர் மற்றும் புகழ் உள்ள மனிதர்களை (இலட்சியவாதிகள், கொள்கைவாதிகள், பொதுநலவாதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தேச நலன் விரும்பிகள் போன்றோர்களைத் தவிர) இது போன்ற BIGG BOSS வீட்டில் 30 நாட்கள் மட்டுமே தங்கவிட்டால் போதும்... 

அவர்களின் உண்மையான சுயரூபம் அனைவருக்கும் தெரிந்து விடும். 



▪நாம், ஒவ்வொருவரின் வெளிக் காட்டும் உணர்வுகளையும், பேச்சுக்களையும், செயற்பாடுகளையும் மற்றும் நடைமுறைகளையும் வைத்துக் கொண்டே... நாம், நம்பித் தொலைக்கிறோம்.

ஆனால், அவர்கள் மட்டுமே (ஒரு சிலரைத் தவிர) நமக்கு எதிரானவர்களாக மாறுவார்கள் என்பதை... நாம் ஒரு கணம்கூட நினைத்துப் பார்ப்பதில்லை!!!



▪ நமது அனைத்துச் செயற்பாடுகளையும் யாரோ ஒருவர் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதை... நாம், எப்போதுமே மறந்து விடுகிறோம்.

அதனாலேயே,

நமது நிஜ உணர்வுகளின் போலிப் பிம்பங்களை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பி நடிக்கத் தொடங்கி விடுகிறோம். (பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது போல்)

BIGG BOSS தேவையற்ற ஒன்றே என்று கருதினால்...

தற்போதைய சூழலில், BIGG BOSS தேவையான ஒன்றே..!

தற்போது....

சரியான தலைமை இல்லாத தமிழர்களிடையே (தற்போது ஈழம் மற்றும் தமிழகத்தின் இளைஞர்கள், திரைப்பட நாயகர்களே, தமது மாயைத் தலைவர்கள் என பைத்தியக்காரத்தனமாக நம்பி தாய்நாட்டையும் மற்றும் தாய் தந்தையரையும் வெறுத்து ஒதுக்கிக் கொண்டிருப்பதால்) BIGG BOSS மூலம் அரசியல்வாதிகளும், திரைநாயகர்களும் போலியானவர்களே என்பதை நம்ப வைக்கும்.

இந்த BIGG BOSS ஐ விமர்சனங்களின் ஊடாக பார்ப்பவர்களே நமது நாட்டில் அதிகம்.!!

ஆனால், கதிராமங்கலம், நெடுவாசல் தற்போது ஈழத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனோருக்காக வீதிவரை  இறங்கி நின்று போராடும் பெற்றோர், உறவினர்களுக்காக.... 

இன்றுவரை ஆதரவாகத்  துடிப்பவர்களும்/ ஊடக ஆதரவும் மிகமிகக் குறைவே..!



தற்போது நம் தமிழர்களிடையே இனம், மொழி மற்றும் தேசம் சார்ந்த விடுதலைப் போராட்ட எழுச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டு...

BIGG BOSS போன்ற திரைக் கவர்ச்சி நிகழ்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். 

பல கோடிப் பார்வையாளர்கள் தினமும் ஒரே நேரத்தில் பார்வையிடுகிறார்கள். புலம்பெயர் ஈழத்தமிழரும் உட்பட...

BIGG BOSS  ஆரம்பித்த முதல் வாரங்களில் எந்தளவு முக்கியத்துவம் பெற்றதோ அந்தளவிற்கு எதிர்மறையான விமர்சனங்களுக்கும் உள்ளானது. 

தற்போது கடந்த வாரங்கள் வரையும் திரைப்படங்களை விடவும் மிகுந்த உச்சக்கட்டம் அடைந்துள்ளதோடு சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. 

ஒரு தேசத்திற்குத் தேவையான முக்கிய செய்திகளை இருட்டடிப்பு செய்து கொண்டு திரை நாயகர்களின் கூத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் தற்போதைய ஊடகங்கள் (ஒரு சில ஊடகங்களைத் தவிர) மிகவும் சிறப்பாகவே செய்து வருகின்றன.

ஆனால், இதுவரையும் அரிதாரம் பூசிய நடிகர்களின் வெளி நடிப்பை திரைகளில் கண்டு அவர்களை தலைவர்களாகவும், கடவுளாகவும் மற்றும் தேவதைகளாகவும் பார்த்து மனதிற்குள் வணங்கி வந்த பல மூடர்களின் மூளைகளில் ஓங்கி ஆணி அறைந்தது போல் BIGG BOSS வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள் ஏற்படுத்தியுள்ளன.



அத்தோடு ஊடகங்களும், சமூக வலைத்தளங்களிலும் BIGG BOSS வீட்டிற்குள் இருப்பவர்களில் ஓவியாவைத் தவிர மற்ற அனைவரையும் அதிலும் குறிப்பாக காயத்ரி ரகுராம், கவிஞர் சினேகன் மற்றும் ஜூலி போன்றோரை கிழித்து தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

ஆஹா... இப்போதுதான் சமூக வலைத்தளங்களும், ஊடகங்களும் திரைநாயகர்களின் உண்மை முகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. 

இவ்வாறாக மக்கள் நம்பித் தொலைக்கின்ற ஒவ்வொரு திரைப்பிரபலங்களையும் வரிசையாக இந்த BIGG BOSS வீட்டினில் தங்க வைத்து அவர்களின் போலி முகமூடிகளை அகற்றி உண்மை முகங்களை காண்பிக்க வேண்டும். 

அதேபோல் போலி முகமூடி அணிந்து கொண்டு மக்களை ஏமாற்றித் திரிகின்ற அரசியல்வாதிகளையும் இந்த BIGG BOSS வீட்டினில் ஒரு மாதமாவது தங்க வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால்.... 

இன்று ஓவியாவைப் போன்ற சகிப்புத்தன்மை நிறைந்த பல நல்ல உள்ளங்களை அடையாளம் கண்டறிந்தது போல் காயத்ரி, ஜூலி மற்றும் சினேகன் போன்றோரைப் போல் உண்மை முகங்களையும் அறிந்து கொள்ள முடியும்.



அத்தோடு போலி அரசியல்வாதிகளையும் திரைப்பட நாயகர்களையும் சிறந்த தலைவர்களாக நம்பி பின்தொடர்ந்த ரசிகர்கள் அந்த மாயையில் இருந்து விடுபட்டு  தற்போதைய நாட்டின் முக்கிய தேவைகள் எவை என்பதை உணர்ந்து இனம், மொழி, தேசமே... நாம் கௌரவத்தோடும், மானத்தோடும் சுதந்திரத்தோடும் மற்றும் நிம்மதியோடும் வாழ உகந்தது என்பதை உணர்ந்து புதியதொரு பாதையில் பயணிப்பார்கள்.

- வல்வை அகலினியன்
« PREV
NEXT »

No comments