Latest News

July 25, 2017

நீதிபதி மீது தாக்குதல் நடத்த முனைந்த சந்தேகநபர் சரண்
by admin - 0


யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் காவற்துறை  நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இன்று காலை 08.20 மணியளவில் குறித்த நபர் யாழ்ப்பாணம் காவற்துறை நிலையத்தில் சரணடைந்துள்ளார்.


இந்நிலையில், அவரிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு காவல் நிலையத்தில் சரணடைந்தவர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவர் என்றும் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இதேவேளை, கடந்த சனிக்கிழமை மாலை நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகத்தில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில் மற்றையவர் தொடர்ந்தும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்க நினைத்த இந்த தாக்குதலின் பின்னணியில் பல சக்திகள் இருப்பதாகவும் அந்த சக்திகள் தமிழின விரோதிகள் மற்றும் சிங்கள இனவாதிகளும் அடங்கிறார்கள் என்பது மிக விரைவில் வெளிவரும் 


« PREV
NEXT »

No comments