Latest News

July 20, 2017

குடும்பிமலை கிராம பற்றிய சிறப்பு பார்வை

by admin - 0

குடும்பிமலை கிராம பற்றிய சிறப்பு பார்வை
******************************

குடும்பிமலை



மட்டக்களப்பு கிராண் மேற்கேயுள்ள இயற்கை எழில் கொழிக்கும் கிராமங்களில் குடும்பிமலை கிராம் மண்வாசம் மணக்கும் குக்கிரம்மாகும். இக்கிராமம் கிராண் பிரதேச்சபைக்கு குடும்பிமலை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்டதாகும்.

குடும்பிமலை கிராமத்தில் போக்குவரத்து மோசமாக உள்ளதுடன் ஆரம்ப பாடசாலையை கொண்ட ஆதிக்குடிகளும் மற்றும் சமூக புரிந்துணர்வு கொண்டவர்களும் வாழும் அழகிய வளங்கொழிக்கும் கிராம்ம் எனலாம்.

இக்கிராமத்தில் 67 குடும்பங்களை கொண்ட 200க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இங்கு வேளாண் நிலங்கள் காணப்படுகிறது, தோட்ட நிலங்கள் இருந்தும் என்றும் வறுமை கோட்டின் கீழ் வருமானத்தை பெற்று வாழும் அவல நிலையை நிரந்தரமாக கொண்டு வாழ்வை நடத்தி வருகின்றனர்

இம்மக்களின் வாழ்க்கை முறையானது யுத்தத்தின் பின்னர் இயல்புகளிலிருந்து மீளாத நிலையில் காணப்படுகின்றனர்




1. பாடசாலையை விட்டு இடைவிலகல்


2. இளவயதில் திருமணம்


3. பெண்களுக்கான விழிப்புணர்வின்மை


4. கல்வியின் முக்கியத்துவத்தை அறியாமை


5. வாழ்வின் அத்தியாவசிய கடமைகளை ஒழுங்காக பின்பற்றாமை:

அதாவது காலைக்கடன்களை கழிக்கவென காடுகளை நம்பி வாழ்வதும், பாடசாலை நேரங்களில் மாணவர்கள் காலைக்கடன் கழிப்பதற்காக காடுகளுக்கு சென்று பின் பாடசாலைக்கு வருவதும் வராமல் விடுவதுமான மிக பிற்போக்கான நடத்தை பழக்க வழக்கங்களை கொண்ட ஒர் சமூகமாகும்.

மாணவர்கள் ஒழுங்கங்கள் பழக்க வழக்கங்களில் பின்தங்கியுள்ளதுடன், சுகாதார சீர்கேடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு

• சுத்தமாக இருக்கவேண்டியதன் முக்கியத்துவம் புரிவதில்லை 

• சிலர் சிறப்பு தேவைகளை பெறவேண்டி இருத்தல்

• பல சிறார்கள் பலதரப்பட்ட நோயின் தாக்கத்துடன் காணப்படல்

• இவர்களது பெற்றோருக்கு எந்தவித சுகாதார மற்றும் கலாச்சார விழிப்புணர்வற்று இருக்கின்றனர்

• ஆரம்ப நிலையிலுள்ள இச்சிறார்களின் எதிர்காலம் ஓர் இருண்ட காலமாகவே அமைய வாய்ப்புக்கள் அதிகமாகும்.










அன்றாட உணவை பெறுவதில் பெரும் நெருக்கடிகளுடன் வாழும் இம்மக்களை எந்தவித அபிவிருத்தியும் சீண்டியதாக வரலாறில்லை. தேர்தல்கள் நடக்கும் காலத்தில் எட்டிபார்க்கும் அரசியியல்வாதிகள் வென்ற பின்பு நினைத்துக்கூட பார்க்காத ஒர் துர்ப்பாக்கிய நிலை.

இம்மக்களது பொருளாதார நிலைகளை நோக்குமிடத்து 

1. காடுபடு பொருளாதாரம்

2. களப்புகள், ஆறுகளில் மீன்பிடித்தல் 

3. பயிர்ச்செய்கை 

4. தானம் பெற்று வாழ்வை கழித்தல்

காடுபடு பொருளாதாரம் எனும் போது தேனெடுத்தல், விறகெடுத்தல், பழங்களை பறித்து விற்றல், காட்டு இலைவகைகளை விற்றல் மற்றும் வேட்டையாடல் போன்றனவாகும் 

தேனெடுத்தலானது எந்தவிதமான கலப்படமற்ற சுத்தமான தேன் இம்மக்களின் பரிசுத்த மனசுபோல் இருக்கும். இத்தேனை சந்தைப்படுத்துதலின் போது இம்மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். அதாவது இத்தேன் சந்தையில் ரூபா 1000-1500 வரை சந்தை விலையாக இருக்க, இம்மக்களிடம் கொள்வனவு செய்யும் வியாபாரிகள் சிறப்பாக சகோதர இனத்தவர்கள் வெறுமனே ரூபா 500/=ஐ கொடுத்து ஏமாற்றுகின்றனர். இதனைப்போலவே விறகு, பழங்கள், இலைவகைகள் மற்றும் இவர்களால் வேட்டையாடப்படும் உடும்பு, முயல், காட்டுக்கோழி, காட்டுச்சேவல் போன்றனவற்றுக்கும் தரமான விலைகள் வழங்கப்படாமல் ஏமாற்றுவது வேதனைமிகு விடயமாகும்

மீன்பிடித்தல், இறால் கட்டல் போன்ற தொழிலை இம்மக்கள் மேற்கொண்ட போதும், இவர்களுக்கான வருமானம் மிக குறைவாகவேயுள்ளது. காரணம் இடைத்தரகர்களினால் இவர்களது பொருட்கள் பெருமளவில் சூறையாடப்படுவதோடு, இவர்களது கல்வியறிவும் மிகவும் பின்தங்கியே காணப்படுகிறது. சாதரமாணக இவர்களால் பிடிக்கப்படும் மீன்களுக்கு ரூபா 40/= - 100/=க்குள் மட்டுப்படுத்துகின்றனர் இடைத்தரகர்கள்.










பயிர்ச்செய்கைக்கு போதிய நிலங்களிலிருந்தும், பயிர்ச்செய்கை தொடர்பான பூரணவிளக்கமின்மை, அதற்கான உபகரணங்களின்மை மற்றும் இவர்களுக்கு உதவும் மனப்பான்மையில் எந்தவித செயற்பாட்டையும் எவரும் சிறப்பாக அரச திணைக்களங்கள் இயங்குவதில்லை.

மேலும் இப்பகுதி மக்களில் பெரும்பாலானவர்கள் தம்மால் இயன்ற தொழிலை செய்து வாழ்ந்துவர, சில குடும்பங்கள் சிறப்பாக 21 குடும்பங்கள் வீடு வீடாக சென்று இரந்து தானம் பெற்று வாழும் நிலையில் உள்ளார்கள். இவர்களுக்கு உழைத்து வாழவேண்டிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தி நல்வாழ்வை அளிப்பது அரசு மற்றும் அரச திணைக்களங்களின் கடமையாகும்.

இப்பிரதேச மக்களுக்கு சிறப்பாக 

•சுகாதாரம்

•கலாச்சாரம்

•வாழ்க்கை முறைமைகள்

•பொருளாதாரத்தை ஈட்டும் வழிகள்

•ஏனைய சமூகத்துடன் இணைந்து வாழும் சத்தரப்பங்கள்

•வாழ்வியலின் தத்துவங்கள்

•தமது சிறார்களின் எதிர்காலம்

•உலக சமூகத்தின் எழுச்சியும் விருத்தியும்

•தமக்கான தேவைகள், சேவைகளை பெறும் வழிமுறைகள் 

போன்றன தொடர்பான விழிப்புணர்வற்று வாழ்கின்றனர். இவர்களுக்கு இவ்வாறான விழிப்புணர்வுகளை முன்னெடுத்தல் மிக மிக அவசியமானதொன்றாகும்

சமூக ஒழுகல்களிலிருந்து விடுபட்ட, தவிர்க்கப்பட்ட மக்களாக இவ்வாதி தமிழ்ப்பழங்குடியினர் காணப்படுகின்றனர். 

இவர்களுக்கான சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டியது, யாருடைய கடமையாகும்.

இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் சிறப்பாக பாராளுமன்ற உறுப்பினர் போன்றோரது தலையாய கடமை இவ்வாறான தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்
திட்டங்களை வரைந்து அதை நடைமுறைப்படுத்தலே ஆகும்.

மேலும் இங்குள்ள ஆரம்ப கல்வி பாடசாலை பலதரப்பட்ட குறைபாடுகளுடன் காணப்பட்ட போதும், இப்பாடசாலை அதிபர் ஆசிரியர்களால் பெரும் சிரமத்தின் மத்தியில் கல்விப்பணி தொடருகின்றது. ஆனால் கிழக்கு மாகாண கல்வியமச்சரின் பார்வைகள் தீண்டாத பாடசாலைகளில் இதுவும் ஒன்றாகவுள்ளது கவலைக்குரிய விடயமாகும்.

R.Hareharan
Founder
Trinco aid


Sent from my iPad
« PREV
NEXT »

No comments