Latest News

June 27, 2017

வவுனியா - புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா
by admin - 0

வரலாற்றுச் சிறப்பு மிக்க வவுனியா புளியங்குளம், புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.இதன்போது, பக்த அடியார்கள் காலை முதல் தூக்கு காவடி, பால் காவடி எடுத்தும் தீச்சட்டி ஏந்தியும், அங்க பிரதிஷ்டை செய்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

 


குறித்த விழாவிற்கு நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பெருமளவான பக்தர்கள் வருகை தந்ததுடன், ஆலய வழிபாட்டிலும் பொங்கல் நிகழ்விலும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இவர்களுக்காக விசேட பயண ஏற்பாடுகளை இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியார் போக்குவரத்துச் சபையும் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  
« PREV
NEXT »

No comments