Latest News

June 26, 2017

மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகத்திற்கு பிரபல சமூக சேவையாளர் த -ஐங்கரன் 7 லட்சம் ரூபா நிதியுதவி
by admin - 0

மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகத்திற்கு பிரபல சமூக சேவையாளர் த -ஐங்கரன் 7 லட்சம் ரூபா  நிதியுதவி 
 


மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு வடமாகாணத்தின் பிரபல சமூக சேவையாளர் த -ஐங்கரன்  முதல்கட்டமாக ரூபா 5 லட்சம்   காசோலையே கழகத்தலைவர் த - வேணுகானன் , பொருலாளர் க -ரதீசன் கழக ஆலோசகர் கை - -ஜெயகாந்தன் கழகநலன்விரும்பி க -சுரேஷ் ஆகியோரிடம் வழங்கிவைத்தார் .

 வடமாகாணத்தில் எங்கும் இல்லாத  வகையில் மின்கம்பம் மற்றும் மின்விளக்குகள் கொள்வனவு செய்யும் பணிகள் இடம்பெற்றுவருகின்றது.

 பல லட்சம் செலவில் மின்கம்பங்கள் செய்யும் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் மின்விளக்குகள் கொள்ளவனவு செய்ய தீர்மானிக்கப்பட்டது .

இதற்குஅமைய எமது கழக மூத்தஉறுப்பினரும் கானா நாட்டில் வாழ்ந்துவரும் க - சதீசன் மற்றும் கழகநிர்வாகத்தின் வேண்டுகோள்களை ஏற்று சமூக சேவையாளர் திரு -த - ஐங்கரன் அவர்கள்  ரூபா 7 லட்சம் நிதியுதவி வழங்குவதாக உறுதிவழங்கினார் .

அதன்படி முதல் கட்டமாக இன்று இரவு 7-00 மணியளவில் 5 லட்சம் ரூபா  காசோலையை கழகநிர்வாகத்திடம் வழங்கி வைத்தார் ,மிகுதி பணத்திற்கான காசோலையை சில வாரங்களில் வழங்குவதாக தெரிவித்துள்ளார் ,  இந்நிகழ்வில் கழக உறுப்பினர்கள் நலன்விரும்பிகள் கிராம பெரியவர்கள் என பலர் கலந்துகொண்டனர் ,
   
« PREV
NEXT »

No comments