Latest News

May 21, 2017

கூடியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை
by admin - 0

தாயகம் – தேசியம் – தன்னாட்சியுரிமை என ஈழத்தமிழ் மக்களின் ஜனநாயகப் போராட்ட வடிவமாகத் திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் ஏழாவது நேரடி அமர்வு அமெரிக்காவில் தொடங்கியது.

 

மே 18 தமிழீழத் தேசிய துக்க நாளின் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையினைத் தொடர்ந்து, மே 19ம் நாளன்று தொடங்கிய இந்த அரசவைக் கூட்டத் தொடர், எதிர்வரும் 21ம் நாள் வரை இடம்பெறுகின்றது.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலெஸ் பெருநகரில் இடம் பெற்று வருகின்ற இந்த அமர்வில் புலம்பெயர் தேசங்களில் இருந்து அரசவைப் பிரதிநிதிகளும், மேற்சபை உறுப்பினர்களும், இந்த அரசவை அமர்வில் நேரடியாக பங்கெடுத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் இருந்து தோழர் தியாகு, தோழமை மையத்த் தலைவி பேராசிரியர் சரசுவதி உட்பட பல வள அறிஞர்கள் பங்கெடுத்துள்ளனர்.

இதேவேளை தமிழர் தாயகத்தில் இருந்தும், தமிழகத்தில் இருந்து பல அரசியற் தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

 

இந்த அமர்வின் முதலரங்கில் ‘சிறிலங்காவின் அரச கட்டமைப்புக்குள் தமிழர் உரிமை சாத்தியமா?’என்ற கருப்பொருளில் கருத்தாடல் ஒன்று இடம்பெறுகின்றது.

மேலும் இரு பேசுபொருள்களை அமர்வு கவனத்துக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.

பல்பரிமாண ஒழுங்காக மாறிவரும் உலக அரசியல் ஒழுங்கு ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு சாதகமான வாய்ப்புகளைத் தருமா என்பது குறித்து உரையாடவுள்ளது.

தமிழ் மக்களை உலகஅரங்கில் ஒருவலுமையமாக உருவாக்குவது குறித்து சிந்தனையும் உரையாடலும் இவ் அமர்வில் இடம் பெறவுள்ளன.

« PREV
NEXT »

No comments