Latest News

May 20, 2017

ROHYPNOL என்ற மாத்திரை மூலமாக தமிழ் சமுகத்தை அளிக்க புதிய ஆயுதம்…!
by admin - 0

வடகிழக்கின் தமிழ் பகுதிகளில் புதிதாக Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான புழக்கத்தில் உள்ளதாம்.இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாக உள்ளதாம். தென்பகுதியில்  இருந்து  பெருமளவு   வடக்கு நோக்கி பெரும்பான்மை  முகவர்கள்  ஊடாக  கொண்டு செல்லப்படுகின்றதாம்.
 

Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு கொடுத்தால் சிறிது நேரத்தில்போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவாராம் காமத்தை தூண்டும் மாத்திரையாம்.

இந்த மயக்கம் 11லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்…!

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டு பிடிக்க முடியாது.

மேலும் இம்மருந்தை தொடர்ந்து பாவித்து வந்தால் அடிமை ஆகி விடுவார்களாம்.
அதை விடகொடுமை இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன் வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாதாம் .
மேலும் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். இதைப் போன்ற நிறைய மருந்துகள் உள்ளனதாம்.ஆனால் மிக மிக எளிதாக கிடைக்க கூடிய மாத்திரை தான் இந்த ரோஹைப்னொல்..!

மயக்கம் தெளிந்த பின்னர் நடந்த எதுவுமே ஞாபகம் இருக்காதாம் எனவே பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முடிந்தவரை தனியே செல்லாதீர்கள்.

மேலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். முடிந்த வரை வெளியிடங்களில் எதுவும் குடிக்காதீர்கள்…!
ஃசீல் செய்து அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் கூட ஊசிகள் மூலம் இவை ஏற்றப்படலாம்….!

குறிப்பாக இலங்கையில் போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ள நிலையில் பல தென்னிலங்கை முகவர்களால் இம் மாத்திரை பல இடங்களில் வினியோகிக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பின் அதிகமான இடங்களில் இம் மாத்திரையின் பயன்பாடு அதிகரித்துள்ளதாம்

.
வடக்கில் உள்ள சிலர் தென்னிலங்கை போதைக் கும்பலுடன் தொடர்புடைய பலர் மூலம் இவற்றை விற்பனை செய்வதாவும் தகவல்.இந்த  தகவல்  கிடைத்தவுடன்  இங்கு தந்துள்ளோம் .எனவே  இந்த செய்தியின்  உண்மை தன்மையையும்  தந்துள்ளோம்.  இந்த  மாத்திரை லெத்தின்  அமெரிக்கா  மெக்ஸிக்கோ  மற்றும்   ஐரோப்பிய    நாடுகளில்  மிகவும்  சுலபமாக  சட்டபூர்வமாக  கிடைக்கின்றது,ஆனால் இந்த  மாத்திரைக்கு  அமெரிக்காவில்  தடை  உள்ளது.

இது  மிகப்பெரிய  ஆபத்தான  மாத்திரைதான்
இது  குறித்து எமக்கு  நன்கு  அறிமுகமான வைத்தியர்  ஒருவரை தொடர்பு கொண்டு கேட்ட  போது ஆம்  இந்த மாத்திரை பெருமளவு வைத்தியர்கள் பாவிப்பது  குறைவு .ஆனாலும்  (இன்ஸ்சோம்யா  மற்றும் அம்னேசியா Insomnia  amnesia ) தூக்கமின்மை நோய்  உள்ளவர்களுக்கு  தேவைப்படும்போது  கொடுப்பது  வழமை .அதாவது  தூக்கம்  இல்லாமல் அவதிப்படும்  நோயாளிகளுக்கு  மிக அவசியம்  என்றால்  மட்டும்  கொடுப்பது வழமை.
இது  இலங்கையில்  தடை இல்லாத மாத்திரை.  

சாதாரணமாக இது சுவிஸ்  நாட்டில் ஏற்கனவே தயாரிக்பப்பட்டது.இப்போது சீனாவில்  பெருமளவு தயாரித்து  சந்தைப்படுத்தப்பட்டு  வருகின்றது என்றார். மேலும்  அமெரிக்கா  போன்ற  நாடுகளில்  இந்த  மாத்திரைக்கு   தடை  உள்ளது  என்றார்.

பாலியல்ரீதியான  பாவனைக்கு இந்த  மாத்திரை  பயன்படுத்தக்  கூடிய  வாய்ப்புள்ளதாக  அந்த  டாக்டர்  தெரிவித்தார்.

இந்த  மாத்திரையை  இலங்கையில்  தடை செய்யாவிட்டால்  தமிழ்  சமுகம்  மட்டுமல்ல  சிங்கள  முஸ்லிம்  சமூகமும்  சீரழியும்  என்பதில் சந்தேகமில்லை .
 
எம்.எம்.நிலாம்டீன்
« PREV
NEXT »

No comments