யாழ்ப்பாணம் - திருநெல்வேலி ஸ்ரீ காளி அம்மன் ஆலயத்தில் உற்சவத்திற்காக அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மனின் வாகனத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வரைபடம் காணப்பட்டுள்ளது.அம்மனின் புலி வாகனத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வரைபடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி ஸ்ரீ காளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் 3 ஆம் நாள் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது.
இதன்போது அம்மன் தானது புலி வாகனத்தில் எழுந்தருளி வரும் போது அம்மனுக்குப் பின்னால் பூக்களாலும் அலங்காரப் பொருட்களாலும் உருவாக்கப்பட்ட தமிழீழ வரைபடம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த இளைஞரை கோப்பாய் போலிஸ் நிலையத்திற்கு நேற்று அழைத்துச் சென்று யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முதல் வருடமும் தமிழீழ படத்துடன் காளி வீதியுலா வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment