Latest News

May 24, 2017

பிரித்தானியாவில் M6 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்
by admin - 0

பிரித்தானியாவில்  M6  நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.படுகாயமடைந்த ஒருவர் மோசமான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
எம்6 நெடுஞ்சாலையில் உள்ள J15 (Stoke-on-Trent) மற்றும் J14 (Stafford North) சந்திப்புகளுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.விபத்து குறித்து Staffordshire பொலிசார் கூறியதாவது, காலை 4.30 மணிக்கு எம்6 நெடுஞ்சாலையில் லொறி- கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் மோசமான நிலையில் உள்ளார். விபத்தை தொடர்ந்து எம்6 நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. சில மணிநேரங்களுக்கு பின் சாலை திறக்கப்படும்.வாகன ஓட்டிகள் மற்ற சாலையை பயன்படுத்தி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments