நீதி கோரி தொடரும் எமது போராட்டமும் முள்ளிவாய்கால் இனப்படுகொலையும்
**மே18 தமிழின அழிப்பு நாள்**
கொடுந்துயர்களில் உச்சகட்டமான தமிழின படுகொலை 2009 மே யில் நடந்து எட்டு வருடங்களை கடந்துவிட்ட நிலையிலும் தமிழர்களுக்கான நீதியோ அரசியற்தீர்வோ கிடைக்கவில்லை.
தமிழர்களுக்கு எதிராக சத்தமில்லாத யுத்தம் அரசு திட்டமிட்ட இனவழிப்பு முறைகளின் படி இன்று வரை தொடர்ந்த வண்ணமே உள்ளது.
யுத்தம் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் தமிழின அழிப்புக்கு சர்வதேச நாடுகளிடமிருந்தோ ஜநாவிடமிருந்தோ இன்று வரை ஒரு தீர்வு கிடைக்காமை தமிழருக்கான தோல்வியே
அந்த வகையில் பிரித்தானிய வாழ் மக்களிடமும் பிறநாட்டு மக்களிடமும் எனக்கு நடந்த இனவழிப்பு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் கொண்டு சென்று அவர்களினூடாக உலக நாடுகளுக்கும் ஜநாவுக்கும் அழுத்தம் கொடுக்கும் நோக்குடன் துவிச்சக்கர வண்டிப் பயணம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
நீதி வேண்டி துவிச்சக்கர வண்டிப் பயணம்
-------------------------------------------------
மே 12ம் திகதி Edinburgh ல் இரவு தங்கி 13ம் திகதி காலை 08:00 மணிக்கு Edinburgh Scottish parliament ல் இருந்து துவிச்சக்கர வண்டிப் பயணம் ஆரம்பமாகும்
13/May : Glasgow
OVER NIGHT / 57miles
(5 hrs cycling from Edinburgh)
14/May : Penrith
OVER NIGHT / 125miles
(11 hrs cycling from Glasgow)
15/May : Manchester
OVER NIGHT / 110 miles
(10 hrs cycling from Penrith)
16/May : Birmingham
OVER NIGHT / 95 miles
(8 hrs cycling from Manchester)
17/May : Coventry
OVER NIGHT / 20miles
(2 hrs cycling from Birmingham)
18/May : Milton Keynes
OVER NIGHT / 50 miles
(4 hrs cycling from Coventry)
18Luton
NOT STAY OVER NIGHT / 25 miles
(2 hrs cycling from Milton Keynes)
18/May : Finishing in the evening at Westminster/ 35 miles
(3 hrs cycling from Luton)
இந்த பாதைகளினூடாக பயணிக்கும் இதன் போது செயற்பாட்டாளர்களாக (துண்டு பிரசுரம் விநயோகித்தல், கையொப்பம் பெறுதல்) செயற்பட விரும்புகின்றவர்கள் செயல்படலாம்
இப்பாதையினூடாக பயணிக்கும் போது அந்ததந்த இடங்களில் இருப்பவர்களும் இப்பயணத்தல் இணைந்து ஒத்துழைப்பு வழங்கலாம். உங்களுக்கு தேவையான துவிச்சக்கர வண்டியினை கொண்டு வருதல் வேண்டும்
அனைவரையும் இப்பயணத்தில் கைகோர்க்கும் படி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக்கெள்கின்றது.
நன்றி
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
பிரித்தானியா
No comments
Post a Comment