மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் செய்முறை
கோமியம்(மாட்டு சிறுநீர்) 15 லிட்
சாணம் 35 கிலோ
பூசணி 5கிலோ
நாட்டுசர்க்கரை 2 கிலோ
பப்பாளி 3கிலோ
பேரீச்சம்பழம் 1/2 கிலோ
கடலைப் புண்ணாக்கு 5கி
தயிர் 1/2 லிட்
200லிட் டிரம்மில் முதலில் கோமியம் மற்றும் சாணத்தினை மேற்கூறிய அளவில் நன்கு கலந்து இரண்டு நாள் மூடி வைக்கவும்.
3ம் நாள் காலை அக்கலவையுடன் நன்கு கூழாக்கப்பட்ட பூசணி ,பப்பாளி கடலைபுண்ணாக்கு, நாட்டு சர்க்கரை, தயிர் மற்றும் பேரீச்சம்பழம் இட்டு நன்கு கலக்கி 130 லிட் நீருடன் கலந்து மூடி வைக்கவும்.
5ம் நாள் ,8ம் நாள் ,11ம் நாள் குச்சி வைத்து கலக்கிவிட்டு பின் குச்சியை கழுவி வைக்கவும்.
12 வது நாட்களில் இக்கரைசல் தயாராகிவிடும்.
நிறைந்த நுண்ணுயிரிகளுடன் அனைத்து சத்துகளுடன் கூடிய எளிமையான விலைகுறைவான இயற்கை இடுபொருள்.
அனைத்து பயிர்களுக்கும் சிறப்பான வளர்ச்சி கொடுக்கக் கூடிய அருமையான கரைசல்.
No comments
Post a Comment