லண்டனில் இருசக்கர வாகனத்தில் கொள்ளையர்கள் அசுர வேகத்தில் வந்து இளம் பெண் ஒருவரின் மொபைல் போனை பிடிங்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் லண்டனில் உள்ள Langham வீதியில் கடந்த வியாழக்கிழமை பிறபகல் 2 மணி அளவில் நான்கு பேர் முகமுடி அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சுத்தியலுடன் அசுரவேகத்தில் வந்துள்ளனர்.
அதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் இருந்த நபர் ஒருவர் கையில் சுத்தியலை வைத்துக் கொண்டு, அங்கும் இங்குமாக பொதுமக்களை மிரட்டிய படி சென்றுள்ளார்.
இதனால் அங்கிருந்த பொதுமக்கள் சிலர் அலறி அடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். அப்போது இளம் பெண் ஒருவரின் ஐபோன்னை பிடிங்கிச் சென்று தப்பியுள்ளனர்.
தற்போது அந்த கொள்ளையர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
மேலும் இது குறிந்து அங்கிருந்த நபர் ஒருவர்க் கூறுகையில், முதலில் அவர்கள் இருசக்கர வாகனத்தில் அசுர வேகத்தில் வந்ததாகவும், இதைக் கண்டு ஏதோ போட்டி அல்லது விளையாட்டிற்கு இருக்கும் என்றும் எண்ணியதாகவும், அதன் பின் வண்டியின் பின்னர் இருந்த நபர் சுத்தியலை எடுத்த பின்னரே அவர்கள் கொள்ளையர்கள் என்பதை அறிந்ததாக கூறியுள்ளார்.
அவர்கள் அங்கிருந்த மக்களை சுத்தியலை வைத்து மிரட்டிய படி சென்றதாகவும், அங்கிருந்த பெண் ஒருவரின் ஐபோனை பிடிங்கியவுடன் தான் தன்னுடைய போனை பையில் வைத்து மறைத்துவிட்டதாகவும், அதன் பின் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் கொள்ளையர்கள் இந்த துணிச்சல் செயலில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments
Post a Comment