நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்று விருதுகள் வழங்கும் நிகழ்வு வருடாந்த இரவு விருந்துபசார நிகழ்வுடன் ஏப்ரல் 22ம் நாள் சனிக்கிழமை ரொறோன்ரோவில் உள்ள ஸ்காபொரோ மாநாட்டு நிலையத்தில் மிகச்சிறப்பான முறையில் நடந்தேறியது.
‘தந்தை செல்வா ஞாபகார்த்த விருது’ திரு ஈழவேந்தன் அவர்களுக்கும், ‘மாமனிதர் துரைராஜா ஞாபகார்த்த விருது’ கலாநிதி சேவியர் பெர்னான்டோ அவர்களுக்கும், ‘நெல்சன் மண்டேலா ஞாபகார்த்த விருது’ தென்னாபிரிக்க மனித உரிமைச் செயல்பாட்டாளரான யஸ்மின் லூயில்ஸ் சூகா அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தந்தை செல்வாவின் பேத்தியான மல்லிகா வில்ஸன், அமெரிக்க மனித உரிமைகள் சட்டவாளர் ஹெதர் ரயன், கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்களான பொப் ஸரோயா, கரி ஆனந்தசங்கரி, ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜாக் மக்லோரன் மற்றும் கவுன்சிலர் நீதன் ஷான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய பலரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழ்ச்மூகத்திற்கு செய்துவரும் சேவைகளை முக்கியமாக தமிழ் மக்களிற்கெதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களிற்கு நீதி விசாரணை கோரும் நடவடிக்கைகளைப் பாராட்டினர்.
நாடுகடந்த அரசாங்கத்தின் கொள்கைகளை விளக்கும் சிறப்புக் கலை நிகழ்ச்சிகளும் இந்நிகழ்வில் இடம்பெற்றன.
No comments
Post a Comment