Latest News

April 06, 2017

வடமராட்சியில் தாக்குதல் ஒருவர் படுகாயம்
by admin - 0

 
வடமராட்சி கபடி சங்கசெயலாளர் மீது கோரதாக்குதல் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதி 



வடமராட்சி பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தில் சாவகசேரி இந்து கல்லூரி ஆசிரியரும் வடமராட்சி கபடி சங்கத்தின் செயலாளருமான பரமேஸ்வரன் சுரஷே் [வயது 32] என்பவர் மீது பருத்தித்துறை சென்தொமஸ்  விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மறறும் ஆதரவாளர்கள் பருத்தித்துறை ஜேசுதாஸ் தலைமையில் வந்து தாக்கியதில் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது கடந்த 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை  திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழக உறுப்பினர்களுக்கும் சென்தொமஸ் விளையாட்டு ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பாட்ட வாய்தார்க்கம் கைகலப்பு ஏற்பாட்டது. இதன் தொடர்சியாக அன்றைய தினம் இரவு 10 மணியளவில் ஜேசுதாஸ் தலைமையில் பருத்தித்துறை முனை பகுதியை சேர்ந்த 50 மேற்பாட் இளைஞர் தரப்பு பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழக மைதானத்திற்குள் கூரிய ஆயுதங்களுடன் புகுந்து தாக்கமுற்பாட்ட போது மைதானத்தில் இருந்த கழக உறுப்பினர் தம்பி ஒடியுள்ளனார். 

இந்நிலையில் சுரேஷ் என்பவர் அவர்களுடன் சமரசம் செய்யமுற்பாட்டபோது அவர்மீது கூரிய ஆயுதங்களினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார் முகப்பகுதியில் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதாரவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு 3 தினங்கள் சிகிச்சை பெற்று சென்றுள்ளார் இச் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்ட போது இதுவரை ஒருவர் கூட கைதுசெய்யப்படவில்லை என்று தெரிவிக்கபபட்டுள்ளது.

பருத்தித்துறை நீதிமன்றத்தில் பதிவாளராக பணியற்றிவரும் ஜேசுதாஸ் பொலிஸ் ஆதரவுடன் இந்த சம்பவத்தை முடிமறைக்க முற்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர் குற்றம்சாட்டியுள்ளார் இச்சம்பவம் தொடர்பாக யாழ் மனிதஉரிமை ஆனைக்குழுவிடமும் முறைபாடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
« PREV
NEXT »

No comments