கிளிநொச்சியில் தாம் குடியிருக்கும் காணிக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் தற்போது 16ஆவது நாளாகவும் தொடர்கிறது.
குறித்த போராட்டம் பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இவ்வளவு காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம், இனியும் வாழ முடியாது தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் எனக்கோரியுள்ளனர்.
அத்துடன் தமக்கான காணி உரிமம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment