தேமுதிக, சிபிஎம், பாஜகவை விட மக்கள் அதிகம் விரும்புவது நாம் தமிழர் கட்சி - புதிய தலைமுறை சர்வே
சென்னை: மாற்று அரசியலை முன்வைப்பவர்களில் தேமுதிக, பாஜக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளை காட்டிலும் நாம் தமிழர் கட்சி முன்னிலை வகிப்பதாக புதிய தலைமுறை டிவி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி தொடங்கியது முதலே தனித்துப் போட்டி என்ற முழக்கத்தை முன்வைத்து நடைமுறைப்படுத்தி வருகிறார் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு சின்னம் கொடுக்க வேண்டும் என தேர்தல் சீர்திருத்தத்தையும் அவர் வலியுறுத்தி வருகிறார்.
திராவிட அரசியலுக்கு மாற்றாக 'தமிழர் நிலத்தை தமிழரே ஆள வேண்டும்' என்ற முழக்கத்தையும் முன்வைக்கிறது சீமானின் நாம் தமிழர் கட்சி. மாற்று அரசியலை கட்டி எழுப்ப வேண்டிய கட்டாயம் உள்ளதாக இளைஞர்களை மையப்படுத்தி பல மேடைகளில் முழக்கமிட்டு வருகிறார் சீமான்.
இந்நிலையில் ஆர்.கே.நகரின் நாடிக்கணிப்பு என்ற தலைப்பில் புதிய தலைமுறை டிவி கருத்துக்கணிப்பை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி மாற்று அரசியலை முன்வைப்பவர்களில் உங்கள் ஆதரவு யாருக்கு? என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பாஜகவிற்கு 8.99% பேரும், சிபிஎம் என 5.45% பேரும், தேமுதிக என 8.54% பேரும், நாம் தமிழர் கட்சிக்கு என 11.72% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் யாருக்கும் ஆதரவு தெரிவிக்க விரும்பவில்லை என 62.67% பேரும் வாக்களித்துள்ளனர்.
No comments
Post a Comment