Latest News

April 06, 2017

ஆமையின் ஓட்டுக்குள் கண்காணிப்பு ' Camera '
by admin - 0

இன்னும் சில ஆண்­டு­களில் இப்­படி நடக்­கலாம். நாட்டின் எல்­லையில் அந்த இரவு நேரத்தில் இரா­ணுவ வீரர்கள் காவல் காத்துக் கொண்­டி­ருப்­பார்கள். அப்­போது, அவர்கள் நின்று கொண்­டி­ருக்கும் அந்த புல்­வெ­ளி­களின் ஊடே ஒரு ஆமை மெது­வாக நகர்ந்து வரும். ஆமை தானே போகி­றது என அவர்கள் அதைப் பெரி­தாக கண்டு கொள்­ளாமல் இருப்­பார்கள். அது உயி­ருள்ள ஆமையா என்று வேண்­டு­மானால் அவர்கள் சந்­தேகம் கொண்டு ஆராய்ந்துப் பார்க்­கலாம். அது உயி­ருள்ள ஆமை என்­றதும் அதைக் கீழே விட்­டு­வி­டு­வார்கள். அவர்­க­ளுக்குத் தெரி­யாது, அந்த ஆமையின் மூளை முழுக்க முழுக்க ஒரு மனி­தனின் கட்­டுப்­பாட்டில் இருக்­கி­றது என்­பது. தம் எல்­லை­யி­லி­ருக்கும் இராணுவ முகாம்­களை வேவு பார்க்க அது வந்­தி­ருக்­கி­றது என்­பது. சம­யத்தில், மனித வெடி­குண்டு போல், அது ஆமை வெடி­குண்­டா­கவும் மாறலாம். ஏனெனில், அதைக் கட்­டுப்­ப­டுத்­து­வது ஒரு மனித மூளை.

இது என் கற்­ப­னையோ, சினிமாக் கதையோ அல்ல. இது இன்­றைய அறி­வியல் கண்­டு­பி­டிப்பு. இயந்­தி­ரங்­களை உரு­வாக்கி, அதைக் கட்­டுப்­ப­டுத்­து­வதில் பெரிய அறி­வியல் ஆச்­சரி­யங்கள் இனி கிடை­யாது. உயி­ருள்ள உயி­ரி­னங்­களின் மூளையை ஊடு­ருவி அதைத் தன் கட்­டுப்­பாட்­டிற்கு கொண்டு வரும் ஆராய்ச்­சியில் பல நாட்டு ஆராய்ச்­சி­யா­ளர்­களும் ஈடு­பட்டு வரு­கி­றார்கள். இது­வரை பூச்­சி­களை வைத்து இது போன்ற ஆராய்ச்­சி­களை மேற்­கொண்டு வந்­தனர். தற்­போது, ஆமையைக் கொண்டு இந்த ஆராய்ச்­சியை வெற்­றி­க­ர­மாக செய்து முடித்­தி­ருக்­கி­றார்கள் தென் கொரிய விஞ்­ஞா­னிகள்.

மனி­தர்­களின் தலையில் "ஹெட் மவுண்டட் டிஸ்­பிளே " (Head Mounted Display) ஒன்று மாட்­டப்­படும். இதில் BCI எனப்­படும் " Brain Computer Interface" மற்றும் CBI " Computer Brain Interface" ஆகி­யவை இணைக்­கப்­படும். இவை மனித மூளையை கணி­னிக்கும், கணி­னியின் உத்­த­ர­வு­களை மூளைக்கும் கடத்தும் கரு­வி­யாக செயற்படும். அதே போன்று ஆமையின் முதுகில் ஒரு கெமரா, வைஃபை ட்ரான்ஸ்­சீவர், கம்ப்­யூட்டர் கொன்ட்ரோல் மாட்யூல் மற்றும் ஒரு பேட்­டரி ஆகி­யவைப் பொருத்­தப்­பட்­டி­ருக்கும். மேலும், கூடு­த­லாக ஒரு அரை - உருளை (Semi-Cylinder) வடி­வி­லான உணர் கரு­வியும் (Sensor) அதன் முதுகில் பொருத்­தப்­பட்­டி­ருக்கும்.

ஆமையின் முது­கி­லி­ருக்கும் கெம­ரா­வி­லி­ருந்து அதன் சுற்­றத்தை HMD பொருத்­திய மனி­தரால் உணர முடியும். இதைக் கண்டு அந்த மனிதர் ஒரு ஆமை­யாக மாறிட முடியும். அதா­வது, " நெய்­நிகர் யதார்த்தம்" (Virtual Reality) போன்ற முறையில், அவன் இருக்கும் இடத்­தி­லி­ருந்தே ஆமை இருக்கும் இடத்­திற்குப் போனது போன்ற உணர்வு ஏற்­படும். அவ­னிடம் இருக்கும் BCI மற்றும் CBI அந்த மனி­தனின் எண்­ணங்­களை EEG சிக்­னல்­க­ளாக மாற்றி ஆமைக்கு சென்­ற­டையச் செய்யும். அதன் முது­கி­லி­ருக்கும் உணர் கருவி (Sensor), மனிதன் செலுத்த நினைக்கும் திசை­களை அவை­க­ளுக்கு உணர்த்தும். அதன்­படி, அந்த ஆமையும் நகர்ந்து செயற்­படும்.

உலகில் எத்­த­னையோ உயி­ரி­னங்கள் இருக்க ஆமையை ஏன் இதற்கு தேர்ந்­தெ­டுத்­தார்கள் என்ற கேள்­வியும் எழு­கி­றது. ஆமைக்கு இயற்­கை­யி­லேயே இருக்கும் அறி­வாற்றல், தடை­களை கண்­டு­ணர்ந்து நகரும் இயல்பு, ஒளி­களின் அலைக் கீற்றை வேறு­ப­டுத்த முடி­கிற திறன் ஆகி­ய­வையே இந்த ஆராய்ச்­சிக்கு இதை தேர்ந்­தெ­டுக்க கார­ணங்­க­ளாக ஆராய்ச்­சி­யா­ளர்கள் சொல்­கி­றார்கள்.

இன்னும் சில ஆண்­டு­களில் இப்­ப­டியும் நடக்­கலாம். மனிதன் அடைய முடி­யாத ஆழ்­க­டலில் எத்­த­னையோ ஆச்­ச­ரி­யங்கள் புதைந்துக் கிடக்­கின்­றன. ஒரு ஆமையாய் மாறி மனிதன் ஆழ்­க­டலில் பய­ணித்து பல கேள்­வி­க­ளுக்­கான விடை­களைக் கண்­ட­றி­யலாம். மாய­மான MH 370 மலே­சிய விமா­னத்தைக் கண்­டு­பி­டிக்­கலாம், சிதம்­பரம் பகு­தியில் பறந்து கொண்­டி­ருந்த போது மாய­மான டோர்னியர் விமானத்தைத் தேடிக் கண்டுபிடிக்கலாம். இப்படி இந்த ஆராய்ச்சியின் எதிர்காலம் எதுவாகவும் இருக்கலாம். அறிவியல் ஆராய்ச்சிகள் அழிவிற்கானவை அல்ல... முதல் பத்தியை தேர்ந்தெடுப்பதா, கடைசிப் பத்தியைத் தேர்ந்தெடுப்பதா என்பது மனிதர்களின் கைகளில் தான் இருக்கின்றது .
« PREV
NEXT »

No comments