அறிவகத்தில் அன்னை பூபதி நினைவு நாள் மிகவும் உணர்வெழுச்சியாக...!
தமிழின விடுதலைக்காக அகிம்சை வழியில் தனது இன்னுயிரையே ஈகம் செய்த நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களது 29 ஆவது நினைவு நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வெழுச்சியாகக் கிளிநொச்சி அறிவகத்தில் நடைபற்றன.
கிளிநொச்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களது நினைவு நாள் நிழ்வுகள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணித் தலைவர் சு.சுரேன் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமானது.
அன்னை பூபதி அவர்களின் நிகழ்வில் முதல் நிகழ்வாக ஈகச்சுடர் ஏற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து கலந்துகொண்ட உணர்வாளர்களால் மலர் வணக்கம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம் ஆகியோரால் அன்னை பூபதி அவர்கள் பற்றிய நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டன.
இந்நிகழ்வில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மக்கள் தமிழ் தேசிய உணர்வாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தியாகச் சுடர் அன்னை பூபதி அவர்களுக்கு தமது நினைவு வணக்கத்தினை மிகவும் உணர்வு பூர்வமாகச் செலுத்தியிருந்தார்கள்.
No comments
Post a Comment