அன்னை பூபதி அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவு
தமிழ் மக்களின் உரிமைக்காக அகிம்சை வழியில் உண்ணா நோன்பிருந்து தனது இன்னுயிரைத் தியாகம் செய்த அன்னை பூபதி அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று 19-04-2017 மாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அன்னையின் திருவுருவப் படத்திற்கு கட்சியின் மூத்த உறுப்பினர் கலையரசன் அவர்கள் மலர்மாலை அணிவித்தார். ஈகைச் சுடரினை கட்சியின் நிர்வாகச் செயலாளர் சுகந்தன் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மலர்வணக்கமும், அகவணக்கமும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து அஞ்சலி உரைகள் இடம்பெற்றது.
No comments
Post a Comment