ஜெனிவா மனித உரிமைகள் பேரவை வளாகத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விசேட உப குழுக் கூட்டத்தில் இலங்கையிலிருந்து சென்றிருந்த பிரதிநிதி சரத் வீரசேகரவுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடுமையான சர்ச்சை ஏற்பட்டது.
இதன்போது முன்னாள் எம்.பி. சரத் வீரசேகர ஒரு யுத்தக் குற்றவாளி என்றும் சுவிஸ் அரசாங்கம் அவரை கைதுசெய்ய வேண் டும் என்றும் நாடு கடந்த
தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமை பிரதிநிதி மணிவன்னன் பத்மநாதன் தெரிவித்ததையடுத்து சர்ச்சை நிலை ஏற்பட்டது.
இலங்கை தொடர்பான ஜெனிவா பிரரேணையின் ஆறு மற்றும் எட்டு ஆகிய செயற்பாட்டு பந்திகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே வலியுறுத்தி இந்த உப குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளான நிரஞ்சலா, மற்றும் தர்சா ஜெகதீஸ்வரன் பாதிரியார் செபமாலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செபமாலை முதலில் பாதிரியார் செபமாலை உரையாற்றுகையில்,
வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் அரசாங்கத்திற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்க வேண்டிய தில்லை என்று கருதுகின்றனர். இந்த விடயத்தில் மக்கள் பாரிய கவலையுடன் இருக்கின்றனர்.
தற்போதும் வடக்கு கிழக்கின் பல்வேறு இடங்களில் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றனர். அரசாங்கம் எதனையும் செய்யாமலேயே இருக்கின்றது. எனவே எமது பிரச்சினையானது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு கொண்டு வந்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். சர்வதேச நீதிபதிகளின் ஊடாக மட்டுமே எமது பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் என்றார்.
இதனையடுத்து உரையாற்றிய தர்சிகா ஜெகதீஸ்வரன் மற்றும் நிரஞ்சலா ஆகியோர் இலங்கையின் நீதித்துறையில் நம்பிக்கை இல்லையென்றும் குமாரபுரம் மிருசுவில் படுகொலை சம்பவங்கள் நீதி நிலைநாட்டப்பட வில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் சர்வதேச விசாரணை வேண்டும் என்று சுட்டிக்காட்டினர்.
சரத் வீரசேகர
இதனையடுத்து உரையாற்றிய சரத் வீரசேகர குறிப்பிடுகையில்,
புலிகள் மக்களை பணயக் கைதியாக வைத்திருந்தபோது, படையினரே அவர்களை மீட்டெடுத்தனர். ஆனால், தற்போது யுத்தக் குற்ற விசாரணை நடத்துமாறு கோருகின்றனர். இலங்கையில் சகலருக்கும் நீதி சமமதானதாகும். சர்வதேச நீதிபதிகளை கொண்டு வந்து விசாரணை நடத்த இங்கு இடமில்லை. இராணுவத்தை மட்டும் சர்வதேச நீதிபதிகளை கொண்டு விசாரணை நடத்த முடியாது. தற்போது நீதி உரிய முறையில் நிலை நாட்டப்படவில்லை எனக் கூறப்பட்டது. ஆனால், கிருஷாந்தி வழக்கில் உரிய முறையில் நீதி வழங்கப்பட்டது.
மணிவண்ணன் பதில்
இவ்வாறு சரத் வீரகேசர உரையாற்றிக் கொண்டிருந்தபோது, குறுக்கீடு செய்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் பிரதிநிதி மணிவன்னன் பத்மநாதன் சரத் வீரகேசரவே ஒரு ?யுத்த குற்றவாளி என்றும் அவரை இங்கு பேச அனுமதித்ததே தவறு என்றும் குறிப்பிட்டார். அத்துடன் போர்க் குற்றவாளியான சரத் வீரகேசரவை சுவிஸ் அராங்கம் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் யுத்த குற்றங்களை செய்து விட்டு அவர் இங்கு பேச முடியாது. யுத்தத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டிருக்க வேண்டும். மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றன. முதியோர்களும் சிறுவர்களும் கொல்லப்பட்டனர். என்றும் மணி வன்னன் பத்மநாதன் சுட்டிக்காட்டினார்.
சிங்கள மக்களும் கொல்லப்பட்டதாக சரத் வீரசேகர கூறினாலும் 2000 ஆயிரம் சிங்கள மக்களே கொல்லப்பட்டனர். ஆனால், 3 இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு என்ன தீர்வு, எனவே சரத் வீரசேகரவை இங்கு பேச அனுமதித்திருக்கக் கூடாது. என்று கூறினார். இதனையடுத்து உப குழு கூட்டத்தில் சர்ச்சை நிலைதோன்றியது.
சரத் வீரசேகர ஆவேசம்
இதனையடுத்து மீண்டும் உரையாற்றிய சரத் வீரசேகர 2009ஆம் ஆண்டு மக்கள் பாதிக்கப்பட்டபோது பாதிரியார் செபமாலை எங்கிருந்தார்?295000 பொது மக்கள் இடம்பெயர்ந்த போது இந்த பாதிரியார் எங்கிருந்தார். அவர் என்ன இங்கு பேசிக் கொண்டிருக்கிறார். யுத்தத்தில் 7ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழக்கவில்லையேன ஐ.நா. விசேட ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இவர் இங்கு பொய் கூறிக்கொண்டிருக்கிறார். அவர்கள் இன்று பேசுகின்றார்கள். ஆனால், தமிழர்களை நாங்களே பாதுகாத்தோம். தொடர்ந்து வழமைக்கு கொண்டுவரப்பட்டது.
பாக்கியசோதி சரவணமுத்து
முன்னதாக பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவண முத்து இலங்கை பிரச்சினையை ஐ.நா. பொதுச் சபைக்கு கொண்டு சென்றால் அது எவ்வாறு அமையும். என்று கேள்வி எழுப்பினார்.
செபமாலை
அதற்கு பதிலளித்து பேசிய பாதிரியார் செபமாலை ஐ.நா. பொதுச் சபைக்கும் பாதுகாப்பு சபைக்கும் இலங்கை விவகாரத்தை கொண்டு செல்வதிலும் சவால்கள் உள்ளன. ஆனால், அதனை தவிர்த்து எங்களுக்கு வேறு வழியில்லை. அரசாங்கம் சொல்லுவதை ஒரு போதும் அமுல்படுத்துவதில்லை. 2009ஆம் ஆண்டு ஜெனிவாவில் இலங்கை ஒரு பிரேரணையை கொண்டு வந்து நிறைவேற்றியது.
ஆனால், இன்று வரை அந்த பிரேரணையின் பரிந்துரைகளும் நிறைவேற்றப்படவில்லை. இது தான் இலங்கையின் நிலைமை. பாதிக்கப்பட்ட மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுவதே அவர்களின் பணியாகக் கொண்டுள்ளனர். அதனால், தான் இந்த விடயத்தை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்லுமாறு வழியுறுத்துகிறோம்.
No comments
Post a Comment