Latest News

January 02, 2017

ஊடக அடக்குமுறையை நிறுத்தாவிட்டால் போராட்டம் வெடிக்கும்! தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்
by admin - 0

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் ஊடக அடக்குமுறையை நிறுத்திக்கொள்விளாட்டால் ஊடகவியலாளர்கள் வீதிக்கு இறங்கி போராடவேண்டி வரும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் 

நேற்றைய முன்தினம்(31) மட்டக்களப்பு இணையம் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் செயலாளர் செ.நிலாந்தன் மற்றும் உறுப்பினர் ச.வரதராஜன் ஆகியோர் கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.






அவர்கள் மேலும் கூறுகையில்

உண்மைகளையும் ஊழல்களையும் வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்களை பொலீஸ்நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்யும் செயற்பாடுகள் மற்றும் ஊடகவியலாளர்களை அதிகாரிகளின் ஊடாக பழிவாங்கும் நடவடிக்கைகள் ஊடகவியலாளர்களின் உறவுகளை பழிவாங்குதல் போன்ற செயற்பாடுகளை அரச நிர்வாகங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் கடந்த ஆட்சியில் நடைபெற்ற அதே நிலை இந்த ஆட்சியிலும் ஊடகவியலாளர்களுக்கு தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. 

மட்டக்களப்பை பொறுத்தவரை ஆட்சி மாறியிருக்கின்றதே தவிர அதிகாரத்தில் உள்ளவர்கள் மாற்றபடவில்லை கடந்த 28.12.2016 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வருடாந்த அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பாக நாம் மாவட்ட அபிவிருத்தி குழுவிடம் வினாவியபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணான காரணங்களை கூறிக்கொண்டு இருக்கின்றனர் உண்மையில் அன்றைய கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களை அனுமதிப்பதில்லை என்ற முடிவினை யார் எடுத்தது? ஊடகவியலாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமைக்கான உண்மையான காரணம் என்ன? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெரியப்படுத்த வேண்டும் இந்த செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற செயற்பாடுகள் தொடருமாக இருந்தால் ஊடகவியலாளர்கள் வீதிக்கு இறங்கி போராடவேண்டி வரும் என தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தன் தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார்

மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வருடாந்த அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்குவது இல்லை என்று முன்னரே சிலர் முடிவெடுத்துவிட்டு அங்கு வந்த ஊடகவியலாளர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டு பின்னர் அதிகாரிகள் வீடியோ எடுத்ததன் காரணமாகத்தான் ஊடகவியலாளர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறிய விடயம் நகைப்புக்குறியதாக உள்ளது. அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பாக பின்னர் வேறுகாரணங்களை சம்பந்தப்பட்டவர்கள் கூறிவருகின்றனர். மாகாணசபை உறுப்பினர்கள் தேவையில்லாததை பேசுவதனால்தான் நாம் ஊடகவியலாளர்களை அனுமதிக்கவில்லை என்று கூறுகின்றனர் இதனை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம் இனியும் இதுபோன்று நடைபெறக் கூடாது அவ்வாறு நடைபெற்றால் நாம் போராடுவதை தவிர வேறு வழியில்லை என கூறினார்.

இங்கு கருத்து தெரிவித்த தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உறுப்பினரான ச.வரதராஜன் தெரிவிக்கையில்

குறித்த கூட்டத்தில் நான் கலந்துகொண்டவன் என்றவகையில் அங்கு ஊடகவியலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவில்லை ஆனால் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்களினது ஊடகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் அவர்களை மட்டும் எப்படி அனுமதிக்க முடியும் ஊடகவியலாளர்களை வெளியில் வைத்து பூட்டி அவர்களை அவமானப்படுத்திவிட்டு தங்களது ஊடகப்பிரிவை மட்டும் அனுமதித்தது எந்தவகையில் நியாயமானது என கேள்வியெழுப்பினார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மாவட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு கருத்தக்களை தெரிவித்திருந்தனர்.

« PREV
NEXT »

No comments