Latest News

December 28, 2016

ஜெயலலிதாவை பார்க்க வந்த மகள் -அவிழும் மர்ம முடிச்சுகள்
by admin - 0

 

கடந்த டிச.5ம் தேதி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிகாரத்தை கைப்பற்ற சசிகலா முயற்சி செய்து வருவதாகவும், சசிகலாவிற்கு எதிராக சசிகலா புஷ்பா வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும் தெரிய வருகிறது.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவரது கடைசி நிமிடம் வரை யாரும் ஜெ.வை பார்க்க அனுமதிக்கவில்லை என்றும், சசிகலா ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

இதனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது.

இந்நிலையில் அதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி தொடர்ந்திருக்கும் வழக்கில் ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருப்பதாகவும், மருத்துவனையில் ஜெ.வின் கூடவே இருந்த சசிகலா இதற்கான விளக்கங்களை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே ஜெ. சிகிச்சையில் இருந்தபோது அப்பல்லோ மருத்துவமனைக்கு மர்ம பெண்மணி ஒருவர் அடிக்கடி வந்து சென்றாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


அந்த மர்ம பெண்மணி யார், அவர் ஏன் ஜெ.வை பார்க்க வேண்டும், மருத்துவர்களுடன் உரையாடியது போன்ற ஆதாரங்கள் தன்னிடம் கிடைத்திருப்பதாகவும் சசிகலா புஷ்பா கூறியிருக்கிறார்.

மேலும் மருத்துவமனைக்கு ரகசியமாக வந்து சென்ற பெண்மணி ஜெயலலிதாவின் மகளா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. ஜெயலலிதாவின் மரணத்தை பற்றி சசிகலா வாய் திறந்தால்தான் மர்ம முடிச்சுகள் அவிழும் என்று சசிகலா புஷ்பா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

« PREV
NEXT »

No comments