Latest News

December 29, 2016

பொதுச்செயலாளர் ஆனார் சசிகலா - திராவிடக்கட்சியின் முதல் தமிழச்சி
by admin - 0

 

சசிகலா, பொதுச் செயலாளராவதில்  எந்தவித சட்ட சிக்கல்களும் இல்லை. கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா ஆன பிறகு வளர்ச்சிக்காக கட்சியில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகி கூறினார்.

சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில்சசிகலாவிடம் கட்சியின் தலைமை பொறுப்பு ஒப்படைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான நகலை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் வானகரத்திலிருந்து கார்டனுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் சசிகலாவை சந்தித்து பேசினர்.

இதுகுறித்து கார்டன் வட்டாரங்கள் கூறுகையில், "தீர்மானத்தின் நகலைப் பெற்ற சசிகலா, கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் பேசினார். அப்போது அவரது முகம், சோகமாகவே இருந்தது. 'அக்கா இருந்த இடத்தில் நானா' என்று அவர் கேட்ட போது, கட்சியின் மூத்த நிர்வாகிகள் 'உங்களைத் தவிர வேறுயாரும் இல்லை' என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அறைக்குள் சென்று இருக்கிறார் சசிகலா. இதனால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சசிகலாவின் பதிலுக்காக கார்டனிலேயே காத்திருந்தனர். சில நிமிடங்களிலேயே அறையில் இருந்து சசிகலா வெளியே வந்தார். அப்போது, அங்கு வைத்திருந்த ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியபோது அவர் கண்ணீர் விட்டு அழுதார். பின்னர், தீர்மான நகலை ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். இதனை சசிகலா பெற்றுக் கொண்டு, பொதுச் செயலாளராக சம்மதம் தெரிவித்தார்" என்றனர்.

இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "சசிகலா, பொதுச் செயலாளராவதில் எந்தவித சட்ட சிக்கல்களும் இல்லை. அவர் பொதுச் செயலாளரான பிறகும் உடனடியாக முதல்வராவார் என்று சொல்வதிலும் உண்மையில்லை. சசிகலா, கட்சியின் பொதுச் செயலாளரான பிறகு வளர்ச்சிக்காக கட்சியில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வாய்ப்புள்ளது" என்றார்
« PREV
NEXT »

No comments