தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மக்கள் நல கூட்டனியில் இருந்து விலகுவதாக மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சமீபகாலமாகவே வைகோவின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருவதாக கூறப்படுகிறது.
மிக சிறந்த பேச்சாளரும், திராவிட கொள்கையின் மீது பற்றும் கொண்ட வைகோ தனது உணர்ச்சி வசமான பேச்சால் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் வழக்குகளுக்கு ஆளாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவின் பொதுக்குழு 29ம் தேதி கூட இருக்கும் நிலையில், ம.ந.கூட்டனியிலிருந்து வைகோ வெளியேறியது மர்மம் நிறைந்ததாகவே இருக்கிறது.
தமிழகத்தின் கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலிலும் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்கு காரணம் வைகோ தான் என்றும் பேசப்படுகிறது.
அதிமுகவில் ஜெயலலிதாவிற்கு பிறகு பிரபலமான தலைவர் யாரும் இல்லை. எனவே அதிமுகவில் வைகோவுக்கு ஏதாவது ஒரு முக்கிய பதவி கொடுக்கப்படலாம் என்கிற தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது.
இதற்காகவே ம.ந.கூட்டனியிலிருந்து வைகோ வெளியேறி இருப்பதாகவும், 29ம் தேதி நடக்கவிருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருவேளை மதிமுக பொதுச்செயலாளர் பங்கேற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லையாம்.
தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதிமுகவில் முக்கிய பதவி கூட தரப்படலாம் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
No comments
Post a Comment