Latest News

December 19, 2016

பிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள்! முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
by admin - 0

 

பிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள்.
முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள் நீடிப்பு,பிரான்சில் நெருக்கடி நிலையை ஜூலை மாதம் 15-ந் தேதி வரை மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்க வகை செய்து, அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப் பட்டுள்ளது . அதன்பேரில் நேற்று ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த ஓட்டெடுப்பில், நெருக்கடி நிலையை மேலும் 7 மாதங்கள் நீட்டிப்பதற்கு 288 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால், தீர்மானம் நிறைவேறியது. எதிராக 32 பேர் மட்டுமே வாக்களித்தனர்.

வரும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அந்த நாட்டின் அதிபர் தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடக்க உள்ள நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அச்சுறுத்துதல்கள் இருப்பதாக பிரான்ஸ் அரசு கருதித்தான், நெருக்கடி நிலையை மேலும் 7 மாதங்கள் நீடிக்க முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அவசரகால நிலை நீடிப்பினால் போலீசார் சந்தேகிக்கும் இடங்களில் உத்தியோகப் பற்றற்ற ஊரடங்கு அமுல் செய்து சுற்றி வளைப்புத் தேடுதல் நடத்தலாம் சந்தேகப்படும் யாரையும் கைது செய்யலாம்,

பிரான்ஸ் நாட்டில் வாழும் ஈழத்தமிழர்கள் இவ்விடயத்தில் முன் ஜாக்கிரதையுடன் நடந்து கொள்ளவும் தேவையற்ற பயணங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள், ஒரு குறிப்பிட்ட பகுதி பொலிசாரின் தீவிர கண்காணிப்புப் பகுதியாக உள்ளது அதில் பாரிஸ் நகரம் முன்னுரிமை கொடுக்கப் பட்டுள்ளது,

பாரிஸ் நகரத்தின் லாச்சப்பல் பகுய்தி பல நாடுகளைச் சேர்ந்தோர் நடமாடும் பகுதி இந்தப் பகுதியில் பாரிய குற்றச் செயல்கள் பதிவாகி உள்ளதுடன் தீவிர கண்காணிப்பிலும் உள்ளனர் அங்கு பரவலாக ஈழத் தமிழ் மக்கள் வாழும் பகுதியாகும்.

அப்பகுதிக்கு தேவையற்ற பயணங்களைக் குறைத்துக் கொள்வதுடன் அனாவசியப் பிரச்சனைகளில் இருந்தும் தமிழ் மக்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் உங்களுக்கான விசா நடைமுறை நீண்டகாலப் போராட்டத்தில் சட்டபூர்வமாக பெறப்பட்டுள்ளது எனவே தயவுடன் தமிழ் மக்கள் எந்த வித குற்றச் செயலிலும் சம்பந்தப் படாமல் இருக்குமாறு வேண்டுகிறோம்,

வரும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அந்த நாட்டின் அதிபர் தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடக்க உள்ள நிலையில்,அதுவரை இந்த அவசரகால நிலை நீடிக்கப் பட்டுள்ளது இந்த காலகட்டத்தில் பெரும்பாலும் நீங்கள் சரிய குற்றத்தில் சம்பந்தப் பட்டாலும் அது உங்களது எதிர் காலத்துக்கு கேள்விக்குறியாக அமைந்துவிடும்.

முடிந்தவரை அனாவசியமாக ஓன்று கூடுதல்,சிறு கலவரங்கள்.சிறு ஆயுதப் பிரயோகம்.அச்சுறுத்தல் கற்பழிப்பு ஆட்கடத்தல்களில் பங்கு கொள்ளல்,மதுபான நிலையங்களில் ஒன்றுக்கு மேற்பட்டோர் குழப்பம் விளைவித்தல் என்பன சாதாரண நேரத்தில் நடப்பதைவிட அவசர கால நிலையில் நடந்தால் 1/3 என்ற வீதத்தில் குற்றவியலில் நீங்களும் உள்ளடக்கப்படுவீர்கள்.

அப்படி உள்ளடக்கப் படும் பொது சில நேரங்களில் உங்களது பிணை மனு கூட நிராகரிக்கப் பட்டு நீண்டகாலம் சிறையில் இருக்க நேரிடும் நாடுகடத்தப் பாடவும் கூடும் விசாவுக்கு விண்ணப்பித்தோர்,அகதியாகப் பதிந்தோர்.பதிய இருப்போர்கள், இவ்விடயத்தை கவனிக்கவும்.

« PREV
NEXT »

No comments