கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் அனைத்து பத்திரிகைகளிலும் வந்துள்ளன. இத்தனைக்கும் கருணாநிதி எதிர்கட்சி தலைவர்.
ஆனால் ஆளும் கட்சியின் தற்போதைய முதல் மந்திரியாக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக 22-செப்டம்பர் 2016 இல், இரவு 9.30க்கு வேதா நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அப்போலோவுக்கு கொண்டு செல்லப்பட்ட புகைப்படங்கள் எந்த பத்திரிகையிலும் வரவில்லை.
இணைப்பு
அதுமட்டுமல்ல, 75 நாட்கள் அப்போலோவிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் புகைப்படங்கள்கூட எதுவும் வெளியிடப்படவில்லை என்பதோடு எவரும் பார்க்கவும் அனுமதிக்கப்படவில்லை.
ஜெயலலிதா அப்போலோவிற்குள் அனுமதிக்கப்பட்ட ஆரம்பத்தில் இருந்து அவர் மரணச் செய்தியை டிசம்பர் 5இல் அறிவிக்கும் வரை இதுவே நடந்தது.
ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் அவருடைய பிரேதம் பல சந்தேகங்களை மக்களிடையே எழுப்பியது. ஜெயலலிதாவின் வாயில் முன்வரிசையில் இரு பற்களை காணவில்லை. ஏன்?
ஜெயலலிதா அவருடைய இல்லத்தில் தாக்கப்பட்ட போது அவை சிதறி இருக்கக்கூடும் [அப்போலோவிற்குள் பற்களை புடுங்க ஜெயலலிதா பல்வலிக்கு செல்லவில்லை]. ஆனால் 'சசிகலா மட்டுமே ஜெயலலிதாவை தாக்கினார்' என்பது பொய். அங்கிருந்த ஆர்எஸ்எஸ் எடுபிடிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் அவை.
இணைப்பு
ராம்குமார் சிறைக்குள் படுகொலை செய்யப்பட்டது ஜெயலலிதாவின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது. பா.ஜ.க / ஆர்.எஸ்.எஸ் தன் அதிகாரத்திற்குள் ராம்குமாரை பலியாக்கிய பின் நடந்த விவாதத்தில் தான் ஜெயலலிதாவின் அரசியல் முடிவுக்கு கொண்டுவர ஆர்.எஸ்.எஸ் முயன்றது.
சுவாதியின் படுகொலையில் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ் வெறியாட்டம் தன்னை அம்பலப்படுத்த முற்படும் எந்த சக்தியையும் அழிக்க தயாராக இருந்தது.
சுவாதியின் படுகொலை என்பது தமிழ்நாட்டுக்குள் இந்து / முஸ்லீம்களிடையே கலவரத்தை ஏற்படுத்தி மற்றொரு குஜராத்தாக உருவாக்க வேண்டும். அதிமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்து ஜெயலலிதாவின் அதிகாரத்தை மட்டுப்படுத்த வேண்டும்.
பிறப்பால் பார்ப்பனத்தியாகிய ஜெயலலிதாவின் அரசியல் வரவு பார்ப்பன ஆதரவு சக்தியால்தான் சாத்தியமாகியது. அதே சமயம் சங்கராச்சாரியை கைது செய்ய வைத்த ஜெயலலிதாவின் அதிகாரத்தை பழிவாங்க நடத்தப்பட்ட அரசியல் ஆட்டத்தில் அவருடைய 'சொத்து குவிப்பு வழக்கு' பலவீனத்தை ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க மிகச் சரியாக உபயோகித்துக் கொண்டது.
மத்திய அரசு ஆதரவோடு ஜெயலலிதாவை சில நாட்கள் சிறைக்குள் அனுப்பி பழிவாங்கிய சங்கராச்சாரியின் பூணூல் அரசியல் அவர்களுக்கு அபத்தமல்ல. இதை புரிந்து கொள்ளாத தமிழர்களுக்கே ஆபத்து.
தத்துவார்த்த இயக்கம் சார்ந்த தா.பாண்டியன் கி.வீரமணி போன்றவர்களுக்கே இந்த பூணூல் அரசியல் பிடிபடவில்லை. சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம்?
"சசிகலாவிற்கு பின்னே மக்கள் இருக்கிறார்கள்" என்று கொண்டாடிய தா.பாண்டியன் மக்கள் விரோதி.
"ஆரிய பா.ஜ.கவினர் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவதை தவிர்க்க வேண்டுமானால், திராவிட கட்சியான அதிமுகவை நாம் ஆதரிக்க வேண்டும் என்று திராவிடர் அரசியல் கருத்தாக்கத்தை அரசியல் வியாபாரிகள் போலாக்கி அதிமுகவினருக்கு ஆதரவு கரம் நீட்டும் கி.வீரமணி ஆதிக்கசாதியின் கூலிப்படை அரசியலை வரவேற்கிறார்.
திமுகவும் சரி அதிமுகவும் சரி தமிழ்நாட்டுக்குள் திராவிட இயக்க சிந்ததாந்தத்தை அரசியலில் வியாபாரமாக்கினார்களே தவிர மக்களுக்கான அரசியலை எப்போதும் முன்னெடுத்ததில்லை.
திராவிடர் இயக்கத்தில் இருந்து பிரிந்த அண்ணா திமுக உருவாக்கி முதல் தேர்தலில் சரணாகதி அடைந்தது ஆரிய நாய்களிடம்தான். கருணாநிதியும் அதைத்தான் செய்தார். எம்.ஜி.ஆர் என்ற கவர்ச்சி கோமாளியும் அதைத்தான் தொடர்ந்தது...
விளைவு நாம் பார்க்கும் திராவிட கட்சிகளின் அரசியல் என்பது மக்களை மோசடி செய்து சொத்து சேர்த்த குடும்ப அரசியல்வாதிகளைத்தான்...
ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை ஆராய வேண்டுமானால்...
சுவாதியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் இயக்க உறுப்பினர்கள் அதற்கு அரசியல் களத்தில் அதிகாரத்தை தவறாக பிரயோகிக்க ஒத்துழைப்பு கொடுத்த பா.ஜ.க எடுபிடிகள். தமிழ்நாட்டுக்குள் கலவரத்தை தூண்ட உபயோகப்படுத்தப்பட்ட 'வினோத் இந்து நேசனல்ட்' [ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்] இவர்களை பிடித்து லத்தி அடியை தொடங்க வேண்டும்...
#தமிழச்சி
17/12/2016
என்று தமிழச்சி தனது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்...
No comments
Post a Comment