அ.தி.மு.க. தொண்டர்களின் அடக்கமுடி யாத கோபத்திலிருந்து தப்பிக்க… சசிகலா தரப்பும் அப்பல்லோவும் பல்வேறு வேலைகளில் இறங்கி யிருக்கின்றன. “முதல் அமைச்சரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துகொண்டிருக்கிறது,… திட உணவுகளை சாப்பிட ஆரம்பித்துவிட்டார்,… உட்கார ஆரம்பித்துவிட்டார்,…எழுந்து நடப்பதற் கான பயிற்சிகளை கொடுத்துக் கொண்டிருக் கிறோம்’…என்றது அப்பல்லோ அறிக்கை. அதைத் தொடர்ந்து சசிகலா தரப்பின் அறிவுறுத்தல்படி அப்பல்லோவும் அ.தி.மு.க நிர்வாகிகளும் பலவிதமாகக் கதையளந்தனர்.
எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் அப்பல்லோ வாசலில் தொடங்கி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பிரார்த்தனை செய்தனர். அவர்கள் நம்பிக்கைக் கேற்றபடியே ஒவ்வொரு நாளும் தகவல்கள் வெளியிடப்பட்டன.
* காவிரி விவகாரம், சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் நடைபெற உள்ள கூட் டத்தில் முதல்வர் ஆற்றவேண்டிய உரையை தலைமைச் செயலாளர் வாசிக்க உள்ளார். இந்த உரையை ஜெ. சொல்ல சொல்ல அதிகாரிகள் தயாரித்தனர்.
* ஜெ. 2 முறை தண்ணீர் வாங்கிக் குடித் தார். வேக வைத்த ஆப்பிள் பழங்களை சாப்பிட்டார்.
* பிசியோதெரபி சிகிச்சையால் ஜெ. நன்றாக பேசுகிறார். சில நாட்களில் வீடு திரும்புவார்.
* எழுவதற்கு பயிற்சி எடுக்கிறார். சாதாரண வார்டுக்கு மாற்றத் திட்டம்.
* எலெக்ட்ரானிக் கருவிகள் மூலம் அரசு அதிகாரிகளுடன் தகவல்களை பரிமாறிக்கொள்கிறார்- அ.தி.மு.க. சீனியர் தலைவர் பொன்னையன்.
* “வழக்கமான உணவை சாப்பிடுகிறார். எப் போது டிஸ்சார்ஜ் ஆகவேண்டும் என்று ஜெய லலிதாவே முடிவு செய்வார்’- அப்பல்லோ ரெட்டி.
* ஓய்வு என்பது நான் அறியாதது. உழைப்பு என்னை விட்டு நீங்காதது. நான் மறுபிறவி எடுத்துள்ளேன்- ஜெ. கையெழுத்திட்ட அறிக்கை.
* அறையில் இருந்தபடி டி.வி. பார்த்து நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்கிறார்.
* மூன்று தொகுதி இடைத்தேர்தல் வெற்றி யால் ஜெயலலிதா உற்சாகம். ஓட்டு எண்ணிக்கை நிலவரத்தை டி.வி.யில் பார்த்தார்.
* “”90 சதவீதம் இயல்பாக சுவாசிக்கிறார். மிகுந்த வலிமை, மனவலிமை படைத்தவர் அவர். எப்போது வீட்டுக்குப் போகவேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார்”. -அப்பல்லோ ரெட்டி
இவையெல்லாம் தொண்டர்களின் நம்பிக்கை யை அதிகரிக்கச் செய்தது. கடந்த செப்டம்பர் 22-ந் தேதி அப்பல்லோவில் ஜெ. அட்மிட் ஆனபோது எந்தத் தொண்டரும் நேரில் பார்க்கவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 74 நாட்களில் ஒருமுறைகூட ஜெ.வின் முகத்தை பார்க்கமுடிய வில்லை. அவரின் குரலையாவது கேட்கமுடியாதா என்கிற ஏக்கம் தொண்டர்கள் மத்தியில் பரவியது.
அப்பல்லோ மற்றும் அ.தி.மு.க. முக்கிய நிர் வாகிகளின் அறிக்கைகள், பத்திரிகை ஊடகங்களின் செய்திகளைப்பார்த்து, “விரைவில் அம்மா குணமாகி இரட்டை விரலை அசைத்து புன்னகையோடு போயஸ்தோட்டம் செல்வார்’ என்று நம்பிக்கை யோடு காத்திருந்த தொண்டர்களுக்கு முகம் தெரியாதபடி அமரர் ஊர்தியில்…
No comments
Post a Comment