ஜெயலலிதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவருடைய அண்ணன் மகள் தீபா சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருப்பதாக விஷயம் கசிந்திருக்கிறது.

அதற்கான பெட்டிஷனை அவர் வியாக்கிழமையன்று தாக்கல் செய்துவிட்டார் என்று சென்னை மீடியா வட்டாரத்தில் பரபரப்பாக செய்திகள் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த செய்தியை உறுதிப்படுத்திக்கொள்ள தீபாவை தேடி அலைந்தது சென்னை மீடியா டீம் ஒன்று. கடைசியாக அவர் அடையாரில் ஒரு கெஸ்டவுஸில் தங்கியிருப்பதை (தங்கவைக்கப்பட்டிருப்பதை) கண்டுபிடித்தனர்.
அவரிடம் பேச எத்தனித்தபோது அந்த கெஸ்டவுஸை சுற்றிலும் வெண்ணிற ஆடையில் சினிமா வில்லன்கள் பாணியில் 36 பேர் கொண்ட குழு தீபாவுக்கு பந்தோபஸ்த்து அளித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களை கடந்து மீடியாக்கள் தீபாவிடம் பேச இயலவில்லை.
தீபாவிடம் கருத்து கேட்டு எழுதினால் சரியாக வரும் என்று மீடியா தரப்பில் வேண்டுகோள் வைத்தபோது அதை அவருக்கு அங்கிருந்தவர்கள் தகவல் அளித்தனர்.
அதனையடுத்து கெஸ்ட் அவுஸில் இருந்து வெளியில் வந்த தீபா, எந்தெந்த பத்திரிகையில் இருந்து வந்துள்ளீர்கள் என்று கேட்டார். அதற்கு ஒரு நிருபர் அவர் பணியாற்றும் முன்னணி தமிழ் நாளிதழ் ஒன்றின் பெயரை சொன்னவுடன் எரிச்சலடைந்த தீபா, உங்ககிட்ட விஷயத்தை சொன்னா அப்படியேவா போடுவீங்க?
‘நேரம் வரும் போது பத்திரிகைகளை சந்திக்கிறேன், இப்போதைக்கு எதுவும் வேண்டாமே ப்ளீஸ்’ என்று மீடியாக்காரர்களை திருப்பி அனுப்பிவிட்டார்.
இருந்த போதும் வாரமிருமுறை வெளியாகும் பிரபல இதழ் ஒன்று தீபாவிடம் பேட்டி கண்டது என்கிறார்கள்.
மேலும் தீபாவை எம்.ஜி.ஆருடன் இருந்த அவரது பழைய விசுவாசி ஒருவர்தான் அவருக்கு கெஸ்டவுஸ் கொடுத்து தங்க வைத்திருக்கிறாராம்.
அந்த முன்னாள் வி.வி.ஐ.பி தற்போது வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட நிலையில் இங்குள்ள அரசியல் துரோக நிகழ்வுகளை கவனித்து அவரது ஏற்பாட்டின் படிதான் தீபா பத்திரபடுத்துள்ளார் என்கிறார்கள்.
தீபா, ஜெயலலிதாவின் ரத்த உறவு என்பதால் அந்தம்மாவுக்கு இருந்த துணிச்சல் நேர்மை உள்ளிட்ட குணங்கள் அனைத்தும் தீபாவிடம் காணப்படுவதாக கூறுகிறார்கள்.
தற்போதைய நிலவரப்படி அவரோ, அல்லது அவரது சார்பிலோ சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெ, உடல் பிரேத பரிசோதனை தொடர்பாக வழக்கு தொடர்ந்திருக்கும் பட்சத்தில் வரும் திங்கள் கிழமையன்று இந்த பிரச்சனை வெடித்து கிளம்பும்.
அதன் பின்னர் பல அரசியல் மாற்றங்கள் நிகழலாம். ஏனென்றால் தீபா, அச்சு அசல் ஜெயலலிதாவை போலவே இருப்பதால் பொதுமக்கள் அவரை பார்க்க போட்டி போடுகிறார்கள். எனவே அம்மாவின் வாரிசு இந்தம்மா என்று அழைக்கப்படும் தீபா தமிழக அரசியலில் விரைவில் அதிர்வலைகளை ஏற்படுத்துவார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
No comments
Post a Comment