தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 29ம் தேதியே உயிரிழந்தார் என்று மலேசிய தமிழ் நாளிதழில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியால் ஜெயலலிதாவின் மரணம் மேலும் சந்தேகத்தை அதிகரிக்கிறது.
ஜெயலலிதா உடல்நிலை பாதிப்பால் கடந்த செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து அவர் 74 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியிட்டது மருத்துவமனை. இதனால் தமிழகம் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் ஜெயலலிதாவின் இறப்பு பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது.
இது பற்றி மலேசியாவில் இருந்து வெளியான நண்பன் என்ற நாளிதழ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா செப்டம்பர் 29ம் தேதி உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளது. இந்த செய்தி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments
Post a Comment