கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ உடல்நலக்குறைவால் இன்று காலமானதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கியூபா: கம்யூனிஸ்ட் புரட்சியாளரும் கியூபாவின் முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு வயது 90.
கியூபாவை ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலமாக 1959 முதல் 2008ம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர் கம்யூனிஸ தலைவர் பிடல் காஸ்ட்ரோ. கடந்த 2006ம் ஆண்டு மத்தியில் அவருக்கு திடீரென இரைப்பையில் கோளாறு ஏற்பட்டது. மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த காஸ்ட்ரோ, மரண வாயிலைத் தொட்டுத் திரும்பினார். காஸ்ட்ரோவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது அவரை உயிராய் நேசிக்கும் கியூபா மக்கள் கவலையில் ஆழ்ந்தனர். எனினும் அவரின் உடல்நிலை படிப்படியாகத் தேறியது.
இனியும் தன்னால் அதிபர் பதவியில் சிறப்பாகச் செயல்பட முடியாது என்று நினைத்த அவர் அதிபர் பதவியை தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் கடந்த 2008-ம் ஆண்டு ஒப்படைத்தார். தற்போது அரசுக்குத் தேவையான ஆலோசனைகளை மட்டும் வழங்கி வந்தார். இந்த நிலையில் தனது 90வது வயதில் இன்று மரணமடைந்து விட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன
No comments
Post a Comment