Latest News

November 26, 2016

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக உயிரிழந்த செந்தூரனின் முதலாம் வருடம் 


by admin - 0

 
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக உயிரிழந்த செந்தூரனின் முதலாம் வருடம்



"தமிழீழ விடுதலையைக் கொடு, ஒளியூட்டு" "ஒரு அரசியல் கைதியேனும் சிறைகளில் இருக்கக்கூடாது அனைவரையும் விடுதலை செய்ய வேணடும்" என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு புகையிரதம் முன் பாய்ந்து உயிரிழந்த கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனின் ஒரு வருட நினைவுதினம் இன்றாகும்.



கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றுவந்த கோப்பாயைச் சேர்ந்த இராஜேஸ்வரன் செந்தூரன் வயது 18 என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

மாணவன் தான் உயிரிழக்க முன்னர் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் ஓராண்டு கடந்தும் நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி' நல்லாட்சி அரசாங்கம் அனைத்து அரசியல் கைதிகளையும் (political prisoners) புனர்வாழ்வளித்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும் "ஒரு தமிழ் அரசியல் கைதிகளேனும் சிறையில் இருக்க முடியாது. இந்த அரசியல் கைதிகளை உடனடியாக (immediately) விடுதலை செய்ய வேண்டியதன் அவசியம் எனக்குப் புரிந்தும்கூட (understand) இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு இன்னமும் புரியவில்லையே என்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. The goverment must deliver all tamil political prisoners immediately என்றும் தமிழ் உறவுகளை உயிராய் நேசிக்கும் உண்மையுள்ள செந்தூரன்" - என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்படப்பட்டிருந்தது.



எனினும் இன்றுடன் மாணவன் செந்தூரன் உயிரிழந்து ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில் மாணவனின் கோரிக்கைகள் தொடர்பில் எந்தவித கவனமும் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments