
மாவீரர் நாளினை, மாவீரர் துயிலும் இல்லங்களில் அனுஸ்டிக்க ஏதுவாக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டுவர வேண்டும். ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த துயிலும் இல்லங்கள் முன்னால் திரண்டால் எவராலும் எதனையும் செய்ய முடியாதெனவும் வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதே வேளை மாவீரர் துயிலும் இல்லங்களில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டுமென, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அரசாங்கத்திடம் நிபந்தனை விதிக்க வேண்டும்’ எனவும் கூட்டமைப்பினர், அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் போது, நிபந்தனைகளை விதித்து ஆதரவு வழங்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அவ்வாறு செய்வதில்லை. தற்போது கூட, பட்ஜெட்டுக்கு ஆதரவு வழங்கும் போது, மாவீரர் துயிலும் இல்லங்களில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனும் நிபந்தனையுடன் ஆதரவு வழங்கியிருக்கலாம். ஆனால் அவர்கள், அவ்வாறு செய்வதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment