நெருக்கடியான நேரங்களில் யாழில் இருந்து பணியாற்றிய மற்றுமொரு ஊடகவியலாளனான அஸ்வின் சுதர்சன் மரணமடைந்துள்ளார். கார்ட்டூனிஸ்ட அஸ்வின் என்ற பெயரினில் அண்மை காலங்களில் அஸ்வின் சுதர்சன் பிரபல்யம் அடைந்திருந்தார்.
நாட்டை விட்டு வெளியேறி மேற்கு நாடொன்றில் அடைக்கலம் புக விரும்புவதாக இறுதி உரையாடலில் சக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்த அஸ்வின் உக்ரேனில் ஒவ்வாமை காரணமாக மரணம் அடைந்ததாகத் தெரியவருகின்றது.
தனது கார்ட்டூன்களால் ஊடகப்பரப்பில் அண்மை காலங்களில் பிரபல்யம் பெற்றிருந்த அஸ்வின் முன்னதாக சுடரொளி மற்றும் வீரகேசரியில் பணியாற்றியிருந்ததுடன் இறுதி காலங்களினில் தினக்குரல் பத்திரிகையில் கார்ட்டூனிஸ்ட்டாக பணியாற்றியிருந்தார்.
பத்திரிகை ஆசிரியர் பேரவை விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருந்த அஸ்வினின் கார்ட்டூன்கள் பல தரப்புக்களதும் கவனத்தை பெற்று வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment