Latest News

June 17, 2016

ஐநா மனித உரிமை ஆணையாளரை சந்தித்தார் சுமந்திரன்
by admin - 0

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளது மற்றும் பேரவையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாதமை குறித்து, ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டிருந்தது.

இதுதொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் முறையிடப்படும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அதேவேளை, அவர் ஜெனிவா செல்வதற்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அமெரிக்கா சென்றிருந்தார்.

வொசிங்டனில் அவர் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments