இந்தியாவில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற இலங்கைத் தமிழ் அகதிகள் படகு இந்தோனேசியாவின் ஆச்சே பிராந்திய கடற்கரையில் கடந்த சனிக்கிழமை கரையொதுங்கியது.
அகதிகளை தரையிறங்க விடாமல் இந்தோனேசிய அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில், படகில் இருந்த சிறுவன் ஒருவனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தம்மை தரையிறங்க அனுமதிக்குமாறும் அகதிகள் கோரியுள்ளனர்.
ஆனால் அதற்கு அதிகாரிகள் மறுத்து வரும் நிலையில், நேற்று படகில் இருந்த ஐந்து பெண்கள் கடற்கரையில் குதித்தனர். இதனால் அவர்களுக்கு சிறியளவில் காயங்கள் ஏற்பட்டன.
இதையடுத்து, அகதிகள் தரையிறங்குவதை தடுக்கும் நோக்கில் வானத்தை நோக்கி இந்தோனேசிய காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதையடுத்து, தரையிறங்கிய பெண்கள், மீண்டும் படகில் ஏற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், படகின் இயந்திரத்தை திருத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
No comments
Post a Comment