Latest News

June 17, 2016

ஐநா மன்றத்தில் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள்
by admin - 0

ஐநா மனிதவுரிமை பேரவையின் 32 வது அமர்வு கடந்த  13 ம் திகதி ஆரம்பமாகி நடைபெறுகின்றது.  இம் முறை  அமர்வில் ஐநா மனிதவுரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பாக இடைகால அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்.

இக் காலப்பகுதியில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை உறுப்பினர்கள் மற்றும் அனைத்துலக மக்களவையின் ஏற்பாட்டில் பன்னாட்டு மனிதவுரிமை அறிஞர்கள் ஐநா மன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு கள நிலைமைகளை அறிந்துகொள்வது மட்டும் அல்லாமல் அங்கு பிரதான அவையிலும் உரையாற்றி வருகின்றனர்.

அத்தோடு இன்றைய தினம் ஐநா மன்றத்தில் பக்க அறையில் தமிழர் நீதிக்கான கருத்தரங்கு ஒன்றையும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களை அவை ஏற்பாடு செய்துள்ளது.

 இவ் நிகழ்வில் தாயகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் சின்னமணி கோகிலவாணி அவர்கள் , தென் ஆப்ரிக்காவில் இருந்து வருகை தந்திருக்கும் சிரேஸ்ட சட்டத்தரணி கிஷ்டன் கோவிந்தர் , சுவீடன் நாட்டில் இருந்து வருகைதந்திருக்கும் பேராசிரியர் பீட்டர்  சல்க், நோர்வேயில் இருந்து வருகைதந்திருக்கும் மனிதவுரிமை சட்டத்தரணி  திரு சிவபாலன் மற்றும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் வெளிவிவகார அரசியல் ஒருங்கிணைப்பாளர் திரு திருச்சோதி அவர்களும் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர் .

இவ் வேளையில் ஐநா மன்றத்தில் ஏனைய தமிழ் அமைப்புகளும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments