Latest News

June 09, 2016

மைத்திரி அரசாங்கமும் மஹிந்த அரசாங்கத்தின் பாதையில்தான் செல்கின்றது
by admin - 0

அரச ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்காகவும் அரசியல் சுயலாப நோக்கம் கருதியும் ஆசிரியர் வெற்றிடமுள்ள பாடசாலைகளில் ஆசிரிய உதவியாளர்கள் என்ற ஆசிரிய விதிமுறைகளை மீறிய நியமனங்களை வழங்கி மக்களைக் கஸ்டப்படுத்தி வந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்த அதே நியமனங்களை நல்லாட்சிக்கான மைத்திரிபால சிறிசேனாவின் அரசாங்கமும் வழங்கி மக்கள் உழைப்பைச் சுரண்டி வருகின்றது.

இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணங்களை மீறி மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் அரசியல் நோக்கம் கருதி வெறும் 6000 ரூபா மாதச் சம்பளத்திற்கு ஆசிரிய உதவியாளர் நியமனங்களை வழங்கி தமது அரசியல் நோக்கங்களுக்காக ஆசிரிய உதவியாளர்களைக் கஸ்டப்படுத்தி அவர்களின் உழைப்பைச் சுரண்டி மோசடி செய்து வந்தது. இதனால் ஆசிரிய உதவியாளர் குடும்பங்கள் பெரிதும் கஸ்டத்திற்கு உள்ளாகி கண்ணீரோடு காணப்படுகின்றன.

ஆசிரிய உதவியாளர் நியமனத்தை தமிழர்களுக்கே மகிந்த அரசாங்கம் வழங்கி அவர்களை ஏமாற்றி அவர்களின் உழைப்பைச் சுரண்டி வந்தது. 
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறும் நல்லாட்சிக்கான மைத்திரி அரசாங்கமும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மக்களை ஏமாற்றி மக்களது உழைப்பைச் சுரண்டுவதற்காக, அதரசியல் நோக்கங்களை நிறை வேற்றிக்கொள்வதற்காக வழங்கிய ஆசிரிய உதவியாளர் நியமனத்தை வழங்கி அவர்களின் உழைப்பை மோசடியான வகையில் சுரண்டி வருகின்றது.

ஆசிரிய உதவியாளர் நியமனம் என்பது இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணங்களுக்கு முற்றிலும் முரணான வகையில் சட்டவிரோதமாக வழங்கி படித்த இளைஞர், யுவதிகளின் உழைப்பைச் சுரண்டி மோசடி செய்யப்படுகின்றது. 
« PREV
NEXT »

No comments