Latest News

June 07, 2016

ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பு!- போர்களமாக காட்சியளிக்கும் கொஸ்கம பகுதி: 8 பேர் பலி!- 47 பேர் படுகாயம்
by admin - 0

கொஸ்கம – சலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 47 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சலாவ இராணுவ முகாமிலிருந்து ஒரு கிலோமீற்றருக்குள் வசிப்பவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு மீண்டும் திரும்ப வேண்டாம் என இராணுவப் பேச்சாளர் இன்று காலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் நேற்று மாலை ஏற்பட்ட வெடிப்புக் காரணமாக அப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. மேலும் தற்போது தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு குறித்த பிரதேசம் போர்க் களம் போன்று காட்சியளிக்கின்றது. மேலும் அவிசாவளை பகுதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொஸ்கமவில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து, அப்பிரதேசத்தில் குடி நீரை பயன்படுத்தும் போது, முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படுமாயின் 117 என்ற அவசர இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.



குறித்த விபத்தால் அப்பகுதியில் இருந்த பாடசாலைகள், வீடுகள், வைத்தியசாலைகள் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் வாகனங்கள் என அனைத்தும் சேமாகியுள்ளன.
மேலும் குறித்த விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 47 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் 39 பேர் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
மேற்படி வெடிப்புச் சம்பவத்தால் இராணுவ முகாமிலிருந்து 6 கிலோ மீற்றர் தொலைவு வரையில் குடியிருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
கொஸ்கம, சலாவ இராணுவ முகாமில் உள்ள ஆயுத களஞ்சியமானது இராணுவத்தின் பிரதான களஞ்சியங்களில் ஒன்றாகும். இங்கு ரீ – 56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் முதல் ஆர்.பி.ஜி. மல்டி பெரல் தோட்டாக்கள் வரை களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை 5.42 மணிக்கு ரீ 56 ரக தோட்டக்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் முதலில் இரு வெடிச் சத்தங்கள் கேட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து மறு பகுதியில் மேலும் சில வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன. இந் நிலையிலேயே தீ பரவ ஆரம்பித்து பாரிய அதிர்வுகளுடன் தொடர்ச்சியாக வெடிச் சத்தங்கள் கேட்டுள்ளன.
இலங்கை இராணுவத்தின் இலத்திரனியல் மற்றும் இயந்திர படைப் பிரிவின் கட்டுப்பாட்டிலேயே இந்த இராணுவ முகாம் உள்ளது.
இராணுவ உள்ளக தகவல் ஒன்றின் படி வெடிப்புக்கள் மற்றும் அதன் அதிர்வுகளால் நள்ளிரவு 12 மணி வரையிலான காலப்பகுதிக்குள் ஒரு இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதுடன் 47 காயமடைந்துள்ளனர். 10 சிவில் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாம்.

« PREV
NEXT »

No comments