பிரித்தானியாவில் இருந்து தாயகம் திரும்பிய ஈழத்தமிழர் ஒருவர் சிறீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுக் கடும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் இவரைக் கைது செய்து சிற்றூர்தி ஒன்றில் கொண்டு சென்ற சிறீலங்கா காவல்துறையினர், இவரை இரண்டு நாட்களாக இரகசிய இடம் ஒன்றில் தடுத்து வைத்து சித்திரவதைகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன் பின்னர் உறவினர்களின் முயற்சியால் இவ்விடயத்தில் பிரித்தானிய தூதரகம் தலையிட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், நீதிமன்ற உத்தரவுப்படி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
No comments
Post a Comment