சந்தி சிரிக்கும் இந்திய உளவமைப்புகள்.!
ஒரு நாட்டின் முக்கிய இடங்களை 360 டிகிரி கோணத்தில் படங்களாக தொகுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்யும் கூகுள் Street View திட்டத்திற்கு இந்திய உள்விவகாரத்துறை அமைச்சு அனுமதி மறுத்துள்ளது.!
இந்த திட்டத்தை இந்தியாவிலும் செயல்படுத்த கூகுள் நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. ஆனால் கூகுள் நிறுவனத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!.
பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு காரணங்களை கூறி Street View திட்டத்திற்கு உள்துறை அமைச்சு மறுப்பு தெரிவித்துள்ளது.
"2008ம் ஆண்டு மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மும்பை நகர புகைப்படங்களை பார்த்து தாக்குதலை திட்டமிட்டதை" உதாரணமாக காட்டியே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.!
கூகிளின் இந்த திட்டமானது, இந்த திட்டம் பாவனையில் உள்ள நாடுகளின் மக்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
உண்மையில் தீவிரவாத அச்சுறுத்தலை காரணம்காட்டி இந்த திட்டத்தை முடக்குவது, ஒரு வல்லரசாக தன்னை முன்னிலைப்படுத்திவரும் இந்திய அரசுக்கு பெரும் தலைக்குனிவே.
இன்றைய நிலையில் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லாத நாடுகள் இல்லை என்றே கூறவேண்டும்.
இதில் இந்தியாவை விட அச்சுறுத்தல் உள்ள நாடுகளான அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தொடங்கி சுண்டக்காய் சிலோன் வரை இந்த திட்டத்தின் பயனை அந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றனர்.
இந்த நாடுகள், இந்த திட்டத்தை அனுமதித்ததன் காரணம் அந்த நாடுகளின் உளவுத்துறைகளின் மேல் கொண்ட நம்பிக்கையே ஆகும்.
கால ஓட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சி பாதையை, தன் நாட்டு மக்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்துவது ஒரு நாட்டின் கடமை.!
இந்த திட்டத்தை தடுத்தமையானது, வல்லரசு கனவில் மிதக்கும் இந்திய உளவுத்துறைகளின் பலவீனங்களையே இது காட்டுகின்றது.
"தனது நாட்டு மக்களுக்கு கிடைக்கும் பயன்களை தடுத்தே" தனது நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது என்பது இந்திய உளவுத்துறைகளின் கையாலாகாத்தனமே அன்றி வேறொன்றும் இல்லை.
இந்திய உளவுத்துறைகளின் " தன்மை" உலகறிந்தது... ஆனபோதும் இவ்வளவு பலகீனமான கட்டமைப்பு என்று எண்ணியதில்லை.
இப்படியொரு கையாலாகாத அரசின் கீழ் வாழும் மக்களே பரிதாபத்துக்குரியவர்கள்.!
காலம் மாறி உலகமக்கள் வளர்ச்சி அடைந்தாலும், இந்திய மக்கள் பேப்பர் மப்புடன் (paper map) தான் சுத்தி வரவேண்டும். :)
இதில் வல்லரசு என்ற கனவு வேறு.! :p
நகைப்புடன் துரோணர்.!!
No comments
Post a Comment