Latest News

June 05, 2016

உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வு 04.06.2016
by admin - 0

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு செயற்ப்பாடாக வேல்விஷன் நிறுவனத்தின் அனுசரனையில் வலிமேற்கு பிரதேசசபையின் ஒழுங்குபடுத்தலில் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புத்தாக்க அரங்க இயக்க கலைஞர்களின் நடிப்பில்  தெருவெளி ஆற்றுகை நிகழ்த்தப்படவுள்ளது. 

புத்தாக்க அரங்க இயக்கத்தின் இயக்குநர்களாகிய எஸ்.ரி.குமரன் எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோரின் நெறியாள்கையில்  இடம்பெறவுள்ள 'உயிர்ப்பு '  தெருவெளி ஆற்றுகை நிகழ்வானது  06.06.2016 திங்கட்கிழமை சுழிபுரம் கிழக்கு காட்டுப்புலம் , வழக்கம்பராய் ஆல மரத்தடி 07.06.2016 செவ்வாய்க்கிழமை மூளாய் பிள்ளையார் கோவிலடி ,   பொன்னாலை கண்ணன் சனசமூக நிலைய முன்றல் , 08.06.2016 புதன்கிழமை  வட்டுத்தெற்கு அடைக்கலம் தோட்டம் கந்தசுவாமி கோவில் ,  வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி சந்தி  , 09.06.2016 வியாழக்கிழமை சங்கானை பஸ்தரிப்பு நிலையம் சங்கானை உப அலுவலக முன்னறல் 10.06.2016 வெள்ளிக்கிழமை அராலி தெற்க்கு ஆலடி சந்தி  ,அராலி உப அலுவலக முன்றல் ஆகிய இடங்களில் ஆற்றுகை செய்யப்படவுள்ளது
« PREV
NEXT »

No comments