Latest News

May 09, 2016

ரேசன் கடைகளை மூடும் வகையில் WTOல் இந்தியா கையெழுத்திட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
by admin - 0

ரேசன் கடைகளை மூடக் கூடிய வகையில் உலக வர்த்தக கழகத்தின் (WTO) வர்த்தக உதவி ஒப்பந்தத்தில்(TFA) இந்தியா கையெழுத்திட்டதைக் கண்டித்து 07/05/2016 சனிக்கிழமை மாலை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மே பதினேழு இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடுதலைக் கழகம், தமிழர் விடியல் கட்சி தோழர்கள் பங்கேற்றனர்.

பொது விநியோகத் திட்டத்தை நிறுத்தக் கூடிய எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்று பொய்யான அறிக்கையை மே பதினேழு இயக்கத்திற்கு எதிராக வெளியிட்ட பாஜக வைச் சேர்ந்த இந்திய தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் பொய்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி மே பதினேழு இயக்கத் தோழர்கள் உரையாற்றினர்.

உலக வர்த்தக கழகத்திலிருந்து இந்தியாவை வெளியேறக் கோரி தோழர்கள் முழக்கமிட்டனர்.







உழைக்கும் மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் வகையில், பொது விநியோகத் திட்டத்தை பாதிக்கும் வகையிலும், விவசாய மானியங்கள் நிறுத்தப்படும் வகையிலும், உணவு தானியக் கிடங்குகளை மூடும் வகையிலும் அமெரிக்காவிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டு வந்துள்ள இந்திய அரசினைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

இந்தியாவின் அதிகார மையம் பாராளுமன்றமா, உலக வர்த்தக கழகமா என்றும் கேள்வி எழுப்பினர்.

நைரோபி மாநாட்டில் இந்தியா செய்திருக்கிற துரோகத்தினால் இந்தியாவின் மக்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் தலைமையில்WTO-ல் போராடி வந்த அனைத்து ஏழை நாடுகளின் உழைக்கும் மக்களுக்கும் அநீதியை இந்திய அரசு இழைத்திருப்பதாக குற்றம் சாட்டினர். இந்த துரோகத்தில் பாஜக-வுக்கும், காங்கிரசுக்கும் சம பங்கு இருப்பதாகவும் கூறினர். இந்த ஒப்பந்தம் குறித்த எதிர்ப்பினை தங்கள் தேர்தல் அறிக்கைகளில் வெளியிடாத தேர்தல் கட்சிகளையும் குற்றம் சாட்டினர்.

காணொளி பதிவுகள் 

ஊடக நேர்காணல்









« PREV
NEXT »

No comments