அண்மையில் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துப் பொறுப்பாளர் பிராபாவை அவரது மனைவி கயல்வழி நேற்றைய தினம் சந்தித்து பேசியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த 02ம் திகதி கல்முனை பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பிராபாவை சந்திக்குமாறு காத்தான்குடி பொலீசார் ஊடாக வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைய நேற்றைய தினம் காலை 10 மணிக்கு கொழும்பில் உள்ள 4ம் மாடிக்கு சென்று சந்தித்துள்ளனர்.
இதன்போது அண்மையில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளின் குடும்பங்களைச் சேர்ந்த சிலரும் வருகை தந்து கைது செய்யப்பட்டவர்களை சந்தித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சுமார்30 நிமிடங்கள் மட்டுமே தங்களை கலந்துரையாட அனுமதித்ததாகவும் ஆனால் பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்து உள்ளே செல்வதற்கு தாமதமாகின்ற காரணத்தினால் 15 நிமிடங்கள் மாத்திரமே தங்களால் கலந்துரையாட முடிந்ததாக சந்திப்பில் ஈடுபட்ட குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments
Post a Comment