தமிழ்நாடு சட்டசபைக்கான 15–வது பொதுத்தேர்தலுக்கு பின்னர் இன்று முதன்முதலாக சட்டசபை கூடியது. தேர்தலில் வெற்றிபெற்ற 231 எம்.எல்.ஏ.க்களும் இன்று பதவி ஏற்றனர்.
சட்டசபைக்கு வந்த தி.மு.க. தலைவர் கலைஞருக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழ்நாடு சட்டசபையில் தொடர்ந்து 13-வது முறையாக அவர் பதவியேற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை தொடர்ந்து. 15-வது சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் மற்றும் 87 தி.மு.க., எம்.எல்.ஏ.க்களும் பதவி ஏற்றனர்.
முன்னதாக இன்று சட்டப்பேரவைக்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும், மு.க.ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக்கொண்டனர்
No comments
Post a Comment