மீண்டும் இந்தியத்தின் கழுத்தறுத்த சிங்களம்
சர்வதேசத்துக்கும் தண்ணி காட்டுகின்றது.!
மீண்டும் இராஜதந்திரத்தில் பெரும் தோல்வியை சந்தித்து வருகின்றது இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கை.!
அப்போதைய இந்திய காங்கிரஸ் அரசின் தலைவி சோனியாகாந்தி, தனி மனித உயிருக்காக, ஒரு இனத்தையே அழிப்பதற்காக, தனது பழிவாங்கும் எண்ணத்தில், அப்போதைய சிங்கள அரசுடன் வலியச்சென்று, எழுதாத உடன்படிக்கை ஒன்றை உருவாக்கி, சரிந்திருந்த சிங்கள இராணுவ இயந்திரத்துக்கு முட்டுக்கொடுத்து, புலிகளை அழிக்க முன் நின்று உதவினார்.!
அந்த உதவிக்கு இரண்டு காரணங்கள் அன்றைய நேரத்தில் இருந்தது. ஒன்று இராஜிவ்காந்தியின் மரணத்துக்கு பழிவாங்குதல். அடுத்தது சீன அரசின் "முத்துமாலை" திட்டத்தின் பிரதான அங்கமாக, மகிந்த அரசுடன் மிகப்பெரும் நெருக்கத்தை சீன அரசு அன்று கட்டியெழுப்பி இருந்தமையே ஆகும்.
சிங்கள அரசை கவனித்துக்கொண்டிருந்த இந்திய அரசு, சீனாவை ஓரங்கட்டும் நோக்கில் இடையில் புகுந்து பணமாகவும், ஆயுதங்களாகவும் மற்றும் உளவுத்தகவல்கள் மூலமாகவும் சிங்கள அரசை தன் வழிக்கு கொண்டுவர முயற்சித்தது.
இந்த உதவிகளை தனக்கு சாதகமாக்கிய சிங்கள அரசு, இந்திய அரசின் தலையில் வெண்ணையை வைத்து, இந்திய அரசை நம்புவது போல பாசாங்கு செய்து, சர்வதேசத்தின் உதவவியுடன் தமிழர் போராட்டத்தை நசுக்கியது.
தனது தேவை முடிந்ததும் இந்திய அரசை மெல்ல, மெல்ல மகிந்த அரசு கழட்டிவிட்டது. இன்றும் சிங்களத்தை நம்பும் இந்திய அரசு, வரலாற்றில் இருந்து பாடங்கள் கற்க மறுக்கின்றது.
சிங்கள அரசு ஒருபோதும் இந்திய அரசின் நண்பனாக இருந்ததில்லை.!
இனியும் இருக்கப்போவதில்லை.!
இந்த உண்மை கசந்தபோதும் ஏனோ இந்திய அரசு தேனுண்ட வண்டாய் சிங்களத்தை சுற்றி வருகின்றது.
இந்திய சீன யுத்தத்தின் போதும்,பாக்கிஸ்த்தான் இந்திய யுத்தத்தின் போதும் இந்திய அரசுக்கு எதிராகவே சிங்கள அரசு இருந்தது. ஆக, சிங்களம் என்றும் இந்தியத்தின் நண்பன் அல்ல. எப்போதும் இந்தியம், சிங்களத்துக்கு வேண்டாத விருந்தாளியே.!
இதை இன்றும் இந்தியம் உணரவில்லை. உண்மையில் இந்திய அரசின் நண்பனாக தமிழர்களே இருந்தனர்.!
அதை உணராத இந்தியம், தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுள்ளது.!
மகிந்த அரசு சீனாவிடம் நெருக்கம் கொண்டதால் சர்வதேசத்தின் உதவியுடனும், இந்திய அரசின் பங்களிப்புடனும் மகிந்த அரசு அகற்றப்பட்டு மைத்திரி அரசு ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.
புதிய அரசும் இவர்களுக்கு கொடுத்த வாக்குப்படி சீன அரசின் முதலீடுகளையும் அவர்கள் மேற்கொண்ட கட்டுமானங்களையும் ரத்து செய்தது.
அதுவரை எல்லாம் சிறப்பாகவே நடந்தது. இவர்களும் நிம்மதிப்பெருமூச்சை விட்டனர். ஆனால் அந்த நின்மதி இவர்களுக்கு தொடரவில்லை.!
சிங்களம் பெரும் பொருளாதார சுமையில் இருந்து மீள்வதற்காக மீண்டும் சீனாவுக்கு நேசக்கரம் நீட்டியபோது, கொடுப்புக்குள் சிரித்தபடி அந்த கரத்தை மீண்டும் சீனா பற்றியுள்ளது.
அண்மையில் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் பல்வேறு உடன்படிக்கைக்கு ஆதரவு வழங்கியுள்ளார். துறைமுக நகர திட்டத்தை மீண்டும் ஆரம்பித்தல், மத்தல விமான நிலையம் மற்றும் மாகம்புர துறைமுகத்தின் உரிமையை சீனாவுக்கு வழங்குதல் போன்றவற்றில், இந்திய அரசின் கடும் எச்சரிக்கையையும் மீறி, மீண்டும் கைச்சாத்திட்டுள்ளார்.
உண்மையை சொல்வதானால் சிங்களத்திற்கு சீனாவை விட்டால் வேறுவழி இப்போது இல்லை.!
மேலைத்தேய நாடுகளுக்கு, இரசிய அரசுடன் இருந்த பனிப்போர் 1991இல் முடிவுக்கு வந்தபின், இரசிய அரசு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. தனி மனித வருமானமாக, மாதமொன்றிற்கு 100-200டொலர் பெறுமதியிலேயே அவர்களின் வருமானம் இருந்தது.
இது நடந்து 10வருடங்களின் பின் ஆட்சிக்கு வந்த, இரசிய அரசின் சர்வதேச உளவுத்துறையான KGP இன் முன்னைநாள் கேணல் தர அதிகாரியாக இருந்த விளாடிமிர் புட்டினின் திறமையான, நிர்வாகத் திறமையால் இரசிய மேலெழுந்தது மட்டுமல்லாது, தனது இராணுவ இயந்திரத்தையும் மறு சீர் செய்து, நவீனமயப்படுத்தி வருகின்றது.
இரசியா போலவே இன்னொரு கொமினித்தேய (communist country) நாடான சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவை மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடுகளையும் ஆட்டம்கானச் செய்துள்ளது.
இன்று அமெரிக்க அரசு சீனாவுக்கு செலுத்தவேண்டிய கடன் தொகை மட்டும் 7.6ரில்லியன்.
அதே போன்று பிரிட்டன் உட்பட பல நாடுகள் சீனாவிடம் கடன் பட்டுள்ளன. இன்றைய நிலையில் பெரும் பணக்கையிருப்பை கொண்ட நாடு சீனாவே.
சொல்லப்போனால் இன்றைய பண்ணையார் சீனா என்பதை யாராலும் மறுக்க முடியாது.!
உண்மையை சொல்வததானால் அமெரிக்க அரசிடம் இருக்கும் திரவப்பணத்தை விட "அப்பில்" நிறுவனத்திடம் அதிகமான திரவப்பணம் கையிருப்பில் உள்ளது என்பதே நிதர்சனம்.
அப்படி நிலைமை இருக்கும் போது 40வருட உள்நாட்டு போரினால் வெறும் கோமணத்துடனிருக்கும் சிங்கள அரசுக்கு சர்வதேசத்தாலும், இந்திய அரசாலும் எவ்வளவுகாலத்துக்கு உதவமுடியும்? அதனாலேயே மீண்டும் சீனாவை தேடிச்சென்று காலில் விழுந்துள்ளது சிங்களம்.
ஆக, சீன அரசு தனிப்பெரும் சத்தியாக உருப்பெறுவதை தடுக்கமுடியாது, மேலைத்தேய நாடுகள் தடுமாறுவதை காணமுடிகின்றது. இரசியா,சீனா, கியூபா,ஈரான்,வடகொரிய போன்ற நாடுகள் கொமினித்தேய (communist countries) கொள்கை மற்றும் முதலாளித்துவ எதிர்ப்பு கொண்ட அரபு நாடுகளும் ஓரணியில் திரண்டுவருகின்றன.
அந்த அணியில் உள்ள சீனாவிடம் தான் சிங்களம் இன்று மீண்டும் கையேந்தி உள்ளது. இது நிச்சையம் ஆட்சி மாற்றம் கொண்டுவந்த நாடுகளுக்கு கசப்பாகவே இருக்கும்.
நிச்சையம் இந்த நேரத்தில் புலிகளின் இருப்பின் அவசியத்தை இவர்கள் உணரும் நேரம் நெருங்கி விட்டது. முன்னைய காங்கிரஸ் அரசு விட்ட தவறையே "செல்பி மன்னன் மோடியும்" விடுகின்றார்.
இவர்களுக்கான பதிலை காலம் நிச்சையம் உணர்த்தும்.!
இதுவரை உலகத்தாரால் உதாசினப்படுத்தப்பட்ட தமிழரின் கையை இறுகப்பற்றவேண்டிய காலம் நிச்சையம் இவர்களுக்கு உருவாகும்..!!
காத்திருப்புடன் துரோணர்.!!!
No comments
Post a Comment